டெஸ்லா கார் விலை குறைய அதிக வாய்ப்பு.. நிர்மலா சீதாராமன் கையில் தான் எல்லாம்..!

சர்வதேச ஆட்டோமொபைல் துறையைப் புரட்டிப்போட்ட எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா பல வருடக் காத்திருப்புக்குப் பின் இந்தியா வந்துள்ளது. இதே வேளையில் புதிதாக உருவாக்கியுள்ள எலக்ட்ரிக் கார்களின் டிமாண்ட்-ஐ பூர்த்திச் செய்யவும், டெஸ்லா நிறுவனத்தின் போட்டியைச் சமாளிக்கவும், இந்தியாவில் வர்த்தகம் செய்யும் அனைத்துக் கார் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பை மேம்படுத்தவும், வர்த்தகத் தளத்தை எளிமையாக்கவும் இந்தியாவில் புதிய கொள்கை மாற்றங்கள், மறுசீரமைப்பு ஆகியவற்றைப் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஆட்டோமொபைல் துறை கொள்கை

ஆட்டோமொபைல் துறை கொள்கை

2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் ஆட்டோமொபைல் துறையின் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் வர்த்தக முறையை எளிமையாக்கவும், பழைய கார்களைப் புழக்கத்தில் இருந்து நீக்கும் Scrappage கொள்கையை அறிவிக்க வேண்டும் என்றும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார் உதிரிப்பாகங்கள் மீதான சுங்க வரியைக் குறைக்க வேண்டும் என இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டோயோட்டா கிரிலோஸ்கார் மோட்டார் நிறுவனம் மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் மற்றும் ஹைப்பிரிட் கார்

எலக்ட்ரிக் மற்றும் ஹைப்பிரிட் கார்

இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் எலக்ட்ரிக் மற்றும் ஹைப்பிரிட் கார் தயாரிக்கவும், அதன் வர்த்தகத்தை எளிமைப்படுத்தவும் புதிய கொள்கையைக் கொண்டு வரவேண்டும் எனவும் டோயோட்டா கிரிலோஸ்கார் நிறுவனம் மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு

2020ல் சரிந்த இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நீண்ட கால வர்த்தக நோக்கத்துடனும், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க முதலீட்டு செய்யும் திட்டத்தின் வாயிலாகவும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கும் இந்தப் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scrappage கொள்கை

Scrappage கொள்கை

இந்தியாவில் பழைய கார்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் Scrappage கொள்கை மத்திய அரசு நீண்ட காலமாக ஆலோசனை செய்து வரும் நிலையில், இந்தியாவில் சுற்றுசூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், புதிய வாகனங்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தவும் இக்கொள்கையை விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் விரும்புகிறது.

டெஸ்லா கார்

டெஸ்லா கார்

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான எளிய கொள்கையும், ஆட்டோமொபைல் இறக்குமதி பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்படும் நிலையில் இந்தியாவில் டெஸ்லா காரின் விலை குறைவது மட்டும் அல்லாமல் தொழிற்சாலை துவங்கவும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+