உலகளவில் எலக்ட்ரிக் கார் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இத்துறையில் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களைக் காட்டியும் முன்னோடியாக இருக்கும் டெஸ்லா தனது வர்த்தகத்தை மேம்படுத்த அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தொழிற்சாலையை உருவாக்கு விற்பனையை அதிகரித்து வருகிறது.
சீனாவில் தொழிற்சாலை அமைப்பது மூலம் டெஸ்லா சீனா எலக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாகப் பல சீன நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தாலும் தொடர்ந்து டெஸ்லா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் சீனாவில் டெஸ்லாவுக்குப் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.
டெஸ்லா கார்களின் பிற கார்களில் இல்லாத அளவிற்கு அதிகளவிலான கேமரா மற்றும் சென்சார்கள் இருக்கும் காரணத்தால் ராணுவ பகுதிகள் மற்றும் ராணுவ குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் டெஸ்லா கார் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சீன ராணுவம் டெஸ்லா கார்களில் இருக்கும் கேமராக்களில் பாதுகாப்புக் குறித்த தரவுகள் திரட்ட கூடும் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதேபோல் சீன ராணுவம் டெஸ்லா கார் உரிமையாளர்களை ராணுவ தளங்கள் மற்றும் ராணுவ குடியிருப்பில் பயன்படுத்த வேண்டாம் என்றும் கார்களை ராணுவ பகுதிகளுக்கு வெளியிலேயே நிறுத்த வேண்டும் என உத்தரவையும் வெளியிட்டுள்ளது.
டெஸ்லா கார்கள் திரட்டும் தகவல்களைச் சீன அரசு ஆய்வு செய்யவோ சரி பார்க்கவோ முடியாது என்பதால் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா அரசு சீனா நிறுவனங்களுக்கு எதிராகப் பல நடவடிக்கைகள் எடுத்துள்ள நிலையில் தற்போது சீனா அமெரிக்காவின் டெஸ்லா கார்களைப் பயன்படுத்துவதில் முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications