உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துப் பாட் குறித்த தரவுகளை இந்நிறுவனம் அளிக்காத காரணத்தால் உலகை புரட்டிப்போட்ட 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரத்துச் செய்தார்.
இதை எதிர்த்து டிவிட்டர் வழக்கு தொடுத்துள்ள நிலையில் முதலில் டிவிட்டருக்குச் சாதகமாக இருந்த இந்த வழக்கு, தற்போது எலான் மஸ்க்-கிற்கு ஆதரவாக ஆவணங்கள் திரட்டுப்பட்டு வரும் நிலையில் இவ்வழக்கு மிகவும் சுவாரஸ்யமாக மாறி வருகிறது.
இந்த நிலையில் எலான் மஸ்க் செவ்வாய்க்கிழமை முக்கியமான டிவீட்-ஐ செய்துள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட்
மான்செஸ்டர் யுனைடெட் என்ற கால்பந்து கிளப்பை வாங்குவதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு எலான் மஸ்க் தனது டிவிட்டர் கணக்கில் "மேலும், நான் மான்செஸ்டர் யுனைடெட்டை வாங்குகிறேன்." என டிவீட் செய்து புட்பால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
எலான் மஸ்க்
இந்த டிவீட்டுக்கு முன்பு 267 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உடைய எலான் மஸ்க், Republican கட்சியில் இடது பாதியையும், Democratic கட்சியில் வலது பாதியையும் தான் ஆதரிப்பதாகவும், இதை விளக்க விரும்புவதாகவும் டிவீட் செய்துள்ளது. ஆனால் இந்தப் பதிவைக் காட்டிலும் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கும் பதிவுக்குத் தான் அதிக லைக், பகிர்வுகள் குவிந்துள்ளது.
2022 ஆரம்பம் முதல்
51 வயதான எலான் மஸ்க் 2022ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து பல சர்ச்சையிலும், பிரச்சனையிலும் சிக்கி வருகிறார். சொந்த வாழ்க்கை முதல் தொழில் வாழ்க்கை முதல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் டிவிட்டர் ஒப்பந்தம் பெரும் சரிவாகப் பார்க்கப்படுகிறது.
சர்ச்சையான பதிவு
எலான் மஸ்க் டிவிட்டரில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் காரணத்தாலே இந்நிறுவனம் சரிவில் இருந்த போது அதை வாங்க முயற்சி செய்தார். மேலும் டிவிட்டரில் சர்ச்சையான மற்றும் பெரிய அளவிலான விவாதத்தை உருவாக்கும் பதிவுகளைச் செய்வதில் எலான் மஸ்க் பெயர்போனவர்.
சீரியஸ் ஆன பதிவில்லை..
இந்நிலையில் எலான் மஸ்க் தனது அரசியல் சார்ந்த பதிவின் தாக்கத்தைக் குறைக்கவே மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குவதாகப் பதிவிட்டு உள்ளார் எனக் கருத்து நிலவும் காரணத்தால் இது சீரியஸ் ஆன பதிவாக இருக்காது எனவும் கூறப்படுகிறது.
No, this is a long-running joke on Twitter. I’m not buying any sports teams.
— Elon Musk (@elonmusk) August 17, 2022
ஜோக்
கடைசியில் எலான் மஸ்க் தனது டிவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளர்.மான்செஸ்டர் யுனைடெட் அணியை தான் வாங்குவதாக நீண்ட காலமாக வதந்திகள் பரவி வருகிறது, இந்த பதிவு வெறும் ஜோக் மட்டுமே. நான் எந்த விளையாட்டு அணியையும் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications