டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க் ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தியாவுக்கு வர திட்டமிடப்பட்ட நிலையில் இந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சி அளித்த நிலையில் லாபம் 55 சதவீதம் குறைந்த காரணமாக அடுத்த சில வருடங்களில் புதிய உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கான திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக டெஸ்லா தெரிவித்தது.
இப்படி இந்தியாவுக்கு வராத எலான் மஸ்க், இந்திய தொழிற்சாலை திட்டத்தைக் கிடப்பில் போட்ட எலான் மஸ்க் திடீரென சீனாவுக்குச் சென்றுள்ளார். என்ன காரணம் தெரியுமா..?

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், ஞாயிற்றுக்கிழமை திடீர் சீனா சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான தனிப்பட்ட ஜெட் விமானம் ஒன்று பீஜிங்கில் தரை இறங்கியதை விமான கண்காணிப்பு செயலி மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இது எலான் மஸ்க் பயன்படுத்தும் விமானம் என சில ஆதாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சரி, அமெரிக்காவில் மலிவு விலை கார்களை தயாரிக்கும் முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ள எலான் மஸ்க் சீனாவுக்கு சொல்லாமல் கொள்ளாமல் எதற்காக சென்றுள்ளார்.
டெஸ்லாவின் இரண்டாவது மிகப்பெரிய சந்தையான சீனாவில், முழு தானியக்க ஓட்டுநர் தொழில்நுட்பம் (Full-Self Driving - FSD) அறிமுகம் குறித்து விவாதிப்பதற்காகவும், தானியக்க ஓட்டுநர் தொழில்நுட்பத்திற்கான அல்காரிதங்களை உருவாக்க சீனாவில் சேகரிக்கப்படும் தரவுகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காகவும், மூத்த சீன அதிகாரிகளைச் சந்திப்பதே இந்த திடீர் விசிட்-ன் நோக்கம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2021 ஆம் ஆண்டு முதல், சீன அரசின் விதிமுறைகளின்படி, டெஸ்லா நிறுவனம் சீனாவில் இயங்கும் தங்களின் வாகனங்களில் இருந்து சேகரிக்கப்படும் அனைத்து தரவுகளையும் ஷாங்காய் நகரில் இருக்கும் டேட்டா சென்டரில் சேமித்து வைத்துள்ளது.
அமெரிக்க மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்லா தனது ஆட்டோபைலட் மென்பொருளை அமெரிக்காவில் வெளியிட்டது. ஆனால் இதுவரையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை தாண்டி சீனா அரசின் அனுமதி அளிக்காத காரணத்தால் சீனாவில் இதை அறிமுகப்படுத்தவில்லை.
இதேவேளையில் எக்ஸ்பெங் (Xpeng) போன்ற சீன மின்சார வாகன நிறுவனங்கள், டெஸ்லா நிறுவனத்தை ஓரம்கட்டும் வகையில் சொந்தமாக உருவாக்கிய தனது தானியக்க ஓட்டுநர் மென்பொருளை அறிமுகப்படுத்தி வருகின்றன.
சமூக வலைத்தளமான எக்ஸ் (X) இல் வாடிக்கையாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனம் விரைவில் சீன வாடிக்கையாளர்களுக்கு FSD ஐ கிடைப்பதாக்கலாம் என்று இம்மாதம் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே சீனாவில் டெஸ்லா தனது வர்த்தகத்தைச் சீன நிறுவனங்களிடம் இழந்து வரும் வேளையில் டெஸ்லா-வின் தனித்துவமான FSD தொழில்நுட்பம் இல்லாதது பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications