ஷாங்காய்: மின்சார வாகன ஜாம்பவான் ஆன டெஸ்லா நிறுவனம், சீனாவில் முதன் முதலாக தொடங்கிய ஷோரூமை மூடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது அதன் இரண்டாவது பெரிய நுகர்வோரான சீனாவில் சில்லறை விலையை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.
எனினும் சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல்வேறு டெக் ஜாம்பவான்களும், செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் டெஸ்லாவும் இத்தகைய நடவடிக்கையினை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவும் ஒரு காரணம்
மேலும் சீனாவில் தற்போது ஆங்காங்கே பரவி வரும் கொரோனாவின் காரணமாக, லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதன் விற்பனையும் சரிவினைக் கண்டு இருக்கலாம். இதுவும் இந்த நடவடிக்கை எடுக்க தூண்டியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேறு இடத்திற்கு மாற்றமா?
டெஸ்லாவின் இந்த நடவடிக்கை குறித்து ராய்ட்டர்ஸ் தகவல்களும் உறுதிபடுத்துகின்றன.
பெய்ஜிங்கின் பிரபலமான ஷாப்பிங் சென்டரான பார்க்வியூ கிரீனில் உள்ள டெஸ்லா ஷோரூம் மூடப்படுவது குறித்தும் டெஸ்லா உறுதிபடுத்தியுள்ளது. மூடப்பட்ட இந்த ஷோரூமினை, ராபிள்ஸ் சிட்டி என்று அழைக்கப்படும் மற்றொரு சிட்டிக்கு மாற்றியுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்போது தொடங்கியது?
புதியதாக தொடங்கப்பட்ட இந்த ஷோரூம் அக்டோபர் நடுப்பகுதியில் தொடங்கப்பட்டதாகவும், பார்க்வியூ கிரீனில் உள்ள இரண்டு மாடி ஷோரூமை விட சிறியது என்றும் கூறப்படுகிறது.
பார்க்வியூ கிரீனில் தொடங்கப்பட்ட இந்த ஷோரூம் கடந்த 2013ம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. 2018ல் மீண்டும் புதுபிக்கப்பட்ட நிலையில் விரிவாக்கமும் செய்யப்பட்டது.
ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது?
இது குறித்து மற்றொரு தரப்பில் மால் உடனான ஒப்பந்தம் காலாவதியான நிலையில், டெஸ்லா அதனை நீட்டிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெஸ்லா தற்போது நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது. அங்கு மாடல்களை காண்பிக்கும். அங்கேயே டெஸ்ட் டிரைவும் செய்து கொள்ளலாம்.
கூட்டம் குறைந்துள்ளதா?
எனினும் கொரோனாவுக்கு பிறகு மக்களின் தேவையானது சரியத் தொடங்கியுள்ளது. மால்களில் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் டெஸ்லா மால்களில் உள்ள ஷோரூம்களை குறைக்க தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
டெஸ்லா விற்பனை
மேலும் டெஸ்லா மற்ற வாகன உற்பத்தியாளர்களை போல் அல்லாமல், டெஸ்லா டீலர்களை மட்டும் நம்பாமல் சொந்தமாகவே பல கடைகளையும் வைத்துள்ளது. ஆன்லைன் மூலமாகவும் கார்களை விற்பனை செய்து வருகின்றது.
கொரோனாவும் ஒரு காரணம்
டெஸ்லாவின் பெரும்பாலான ஷோரூம்கள் சீனாவின் 7 பெரிய நகரங்களில் உள்ளது. இதில் ஷென்சென், செங்டு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களும் அடங்கும். இந்த நகரங்கள் தான் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இதுவும் டெஸ்லாவின் முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications