டெஸ்லா - ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம், இந்நிறுவனத்தைப் பற்றி விவரிக்க இந்த 3 சொற்கள்போதும். வியாழக்கிழமை வர்த்தகத்தில் டெஸ்லா எந்தொரு அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமும் செய்யாத ஒகு சாதனையைப் படைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
ஆம், அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான போர்ட் மோட்டார்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் மதிப்பையும் தாண்டி முதல் முறையாக 100 பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்றுள்ளது. அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனம் முதல் முறையாக 100 பில்லியன் டாலர் மதிப்பை தொட்டது பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்கள் வரவேற்பு
டெஸ்லா சில வாரங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த சைபர்டிரக் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மட்டும் அல்லாமல் டெஸ்லா அடுத்தடுத்து தொழிற்சாலைகளை வெளிநாட்டில் அமைத்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு சீனாவில் தொழிற்சாலை துவங்கி கார்களை டெலவரி செய்யத் துவங்கியுள்ளது.
ஐரோப்பா சந்தை
சீனா தொழிற்சாலை மூலம் ஒட்டுமொத்த ஆசிய சந்தையை முழுவதும் அடைய திட்டமிட்டிருக்கும் டெஸ்லா, ஐரோப்பிய சந்தையை அடைய தற்போது ஜெர்மனியில் புதிய கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா.
3 மாத வளர்ச்சி
இந்த அடுத்தடுத்த அறிவிப்பால் டெஸ்லா நிறுவன பங்குகள் கடந்த 3 மாதத்தில் மட்டும் இரட்டிப்பு மதிப்பை அடைந்துள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் எந்தொரு நிறுவனத்திற்கும் நடந்திராத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
100 பில்லியன் டாலர்
வியாழக்கிழமை வர்த்தகத்தில் டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 8.1 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்குகின் விலை 591.78 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்த நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலரை கடந்துள்ளது.


Click it and Unblock the Notifications