உலக அளவில் மின்சார கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடி நிறுவனமாக எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டெஸ்லா நிறுவனம் முதன்முறையாக இந்திய சந்தையிலும் கால் பதித்திருக்கிறது.
டெஸ்லா கார்: கடந்த சில மாதங்களே டெஸ்லா நிறுவனம் தன்னுடைய காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகிறது என்பது குறித்துதான் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் மும்பை மற்றும் டெல்லி ஆகிய பகுதியில் தன்னுடைய முதல் ஷோரூமை திறந்தது. இந்தியாவில் கார் விற்பனைக்கான பணிகளை துரிதப்படுத்தியது.

முதல் கார் டெலிவரி: இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் தன்னுடைய முதல் காரை இன்று மகாராஷ்டிரா மாநிலம் முப்பையில் டெலிவரி செய்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் தான் இந்தியாவில் டெஸ்லாவின் முதல் காரை வாங்கிய வாடிக்கையாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கிறார்.
யார் முதல் வாடிக்கையாளர்: டெஸ்லா நிறுவனத்தின் முதல் காரை டெலிவரி பெற்றது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கும் பிரதாப் சர்நாயக் மாநிலத்தில் மின்சார வாகனங்கள் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் பலரும் மின்சார வாகனங்கள் வாங்கி பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே முதல் காரை தான் பதிவு செய்து டெலிவரி பெற்றதாக கூறியிருக்கிறார். இந்த காரை தன்னுடைய பேரப்பிள்ளைக்கு பரிசாக வழங்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
படிப்படியாக விரிவாக்கம்: நீடித்த நிலைத்தன்மை கொண்ட சுற்றுசூழலுக்கு கேடு தராத போக்குவரத்து முறைகளுக்கு மக்கள் மாறுவதை ஊக்குவிக்கவே முதல் காரை டெலிவரி பெற்றதாக தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனம் மும்பை, டெல்லி, புனே, குருகுகிராம் ஆகிய நான்கு நகரங்களில் மட்டுமே தன்னுடைய கார்களை டெலிவரி செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறது. படிப்படியாக இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஷாங்காயில் இருந்து இறக்குமதி: ஷாங்காயில் இருந்து இந்த கார்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன . இந்தியாவில் முதல் கட்டமாக Model Y கார்களையே டெஸ்லா விற்பனை செய்கிறது இந்தியாவில் அவற்றின் விலை 60 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் Rear-Wheel Drive மாடல் கார் 60 லட்சம் ரூபாய்க்கும் Long Range Rear-Wheel Drive கார் 68 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
என்னென்ன வசதி: இதில் Rear-Wheel Drive கார் மணிக்கு 201 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது, பூஜ்ஜியத்தில் 5.9 வினாடிகளில் 100 கிமீ என்ற வேகத்தை எட்டி விரும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 238 கிமீ வரை பயணிக்க முடியும் என்ற சூப்பர் சார்ஜிங் பேட்டரிகளை கொண்டுள்ளது. Long Range Rear-Wheel Drive கார் மணிக்கு 201 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது, பூஜ்ஜியத்தில் 5.6 வினாடிகளில் 100 கிமீ என்ற வேகத்தை எட்டி விடும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 267 கிமீ வரை பயணிக்க முடியும்.
முன்பதிவு குறைவு: இருந்தாலும் டெஸ்லா கார்களை இதுவரை 600 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு இந்த ஆண்டு 2000க்கும் அதிகமான கார்களை இறக்குமதி செய்வதாக இருந்த திட்டத்தை மாற்றி அமைத்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications