அமெரிக்க எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா இந்திய சந்தையில் நுழைந்து ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லாத காரணத்தால் தள்ளுபடி விலையில் கூவி கூவி விற்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
டெஸ்லா கடந்த ஆண்டு Model Y எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுகத்தின் போது மக்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடினர், ஆனால் இதன் அதிகப்படியான விலை காரணமாகவும், இந்திய சந்தையில் பிரீமியம் கார்கள் இதைவிடவும் குறைவான விலையில் கிடைக்கும் காரணத்தால் புக் செய்தவர்களும் டெஸ்லா காரை வாங்க விருப்பம் காட்டாமல் உள்ளனர்.

கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட முதல் 300 Model Y கார்களில் சுமார் 100 கார்கள் விற்கப்படாமல் உள்ளன. இவை இறக்குமதி செய்யப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகும் டெஸ்லாவின் கையிருப்பில் தேங்கம் அடைந்துள்ளகு.
இந்த கார்களை விரைவாக விற்க, டெஸ்லா சில Model Y வகைகளுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகைகள் பொது அறிவிப்பாக இல்லாமல், தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரகசியமாக வழங்கப்படுவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
டெஸ்லா இந்தியாவில் தனது காரை விற்பனை செய்ய திட்டமிடும்போதே மிகவும் எச்சரிக்கை உடனே செயல்பட்டது, இதனால் காரணமாகவே Model Y எஸ்யூவி என்ற ஒரே ஒரு மாடலை மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க விலை சுமார் ரூ.69.67 லட்சத்திலிருந்து ரூ.79.19 லட்சம் வரை உள்ளது.
Model Y-க்கு சுமார் 600 புக்கிங் வந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட 300 கார்களில் 200 கார்கள் மட்டுமே விற்கப்பட்டு உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் எஸ்யூவி பிரிவில் இதைவிடவும் குறைவான விலையில் பல கார்கள் இருக்கும் காரணத்தால் காசுக்கு ஏத்த பணியாரம் ஃபார்மூலா படி இந்தியர்கள் மற்ற பிராண்டுகளுக்கும், மற்ற கார்களையும் வாங்கி வருகின்றனர்.
இதேவேளையில் எலான் மஸ்க் நேற்று வெளியிட்ட டிவீட் உலகளவில் இருக்கும் அனைத்து டெஸ்லா வாடிக்கையாளர்கள் நெஞ்சில் இடியை இறக்கியுள்ளது.
டெஸ்லா CEO எலான் மஸ்க் தனது X (முன்பு ட்விட்டர்) பக்கத்தில், டெஸ்லாவின் Full Self-Driving (FSD) அம்சத்தை இனி one-time purchase முறையில் விற்பது பிப்ரவரி 14, 2026க்கு பின் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக, FSD இனி மாதாந்திர சந்தா அதாவது monthly subscription மூலமாக மட்டுமே கிடைக்கும். இந்த மாற்றம் FSD-யை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு புதிய நிதி சுமையை கொடுக்கும். ஏற்கனவே FSD வாங்கியவர்கள் தொடர்ந்து அதை பயன்படுத்தலாம், ஆனால் புதிய வாடிக்கையாளர்களுக்கு இனி மாத சந்தா வழியில் மட்டுநே பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications