அமெரிக்காவில் மோடி மற்றும் எலான் மஸ்க் சந்திப்புக்கு பின்பு டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைய தயாராகி வருகிறது. டெஸ்லா இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை அமைப்பதற்கு முன்பு ஷோரூம் திறந்து கார் விற்பனையை துவங்கிய திட்டமிட்டு உள்ளது. இதன் படி 2025 ஏப்ரல் மாதமே டெஸ்லா தனது கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனம் ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொழிற்சாலையிலிருந்து எலக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் தனது விற்பனையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியச் சந்தையில் போட்டித்தன்மை மற்றும் மக்களின் வரவேற்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 25,000 டாலருக்கும் குறைவான விலையில் அதாவது சுமார் 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் ஒரு மலிவான எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த டெஸ்லா திட்டமிட்டுள்ளது.

டெஸ்லாவின் பட்ஜெட் விலை கார் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக BYD, ஹூண்டாய், டாடா, மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார் வர்த்தகம் அதிகப்படியான சவாலை எதிர்கொள்ளும்.
டெஸ்லா நிறுவனம் தனது இந்திய வர்த்தகத்திற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. டெல்லி ஏரோசிட்டி மற்றும் மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) போன்ற முக்கிய பகுதிகளில் தனது முதல் ஷோரூம்களை அமைக்க டெஸ்லா இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இதற்காக மும்பையில் ஸ்டோர் மேனேஜர், சர்வீஸ் அட்வைசர் மற்றும் சர்வீஸ் டெக்னீஷியன் போன்ற 13 வேலை வாய்ப்புகளுக்கு விளம்பரம் செய்துள்ளது டெஸ்லா, இதேபோல் டெஸ்லா டாடா குழுமத்தின் ஊழியர்களை இதற்காக வலை வீசுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கான இறக்குமதி வரிகளை மேலும் குறைக்க வாய்ப்புள்ளது என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அமெரிக்க அரசின் ரெசிப்ரோக்கல் வரி விதிக்கப்படும் அச்சம் இருக்கும் காரணத்தால் இதை குறைக்க இந்திய அரசு வரிகளைக் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில், 40,000 டாலருக்கும் அதிகமான விலை கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கான அடிப்படை சுங்க வரி 100% லிருந்து 70% ஆக குறைக்கப்பட்டது. இருப்பினும், 40,000 டாலர் வரை விலை கொண்ட கார்களுக்கான அடிப்படை சுங்க வரி 70% ஆக உள்ளது. இந்த நிலையில் தான் பட்ஜெட் கார்களுக்கான வரிகளில் மேலும் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது, இதன் மூலம் டெஸ்லா கார்களின் விலை மட்டும் அல்லாமல் அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களின் விலையும் குறையும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications