உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தில் அடுத்த காலாண்டில் மீண்டும் ஒரு பணிநீக்க அலை வர உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தில் ஏற்கனவே 2022 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் அலுவலகத்திற்கு வராத ஊழியர்கள், பொருளாதார மந்த நிலை காரணமாக அறிவிக்கப்பட்ட பணிநீக்கம் என ஒரு ரவுண்ட் முடிந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு முறை பணி நீக்க அலை வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எலக்ட்ரெக் என்னும் தளம் டெஸ்லா நிறுவனத்தில் பணிநீக்கம் இருக்கும் என அறிவித்துள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் நிறுவனத்தில் இதுவரையில் 5000க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் மற்றும் ராஜினாமா செய்துள்ள நிலையில் டெஸ்லா நிறுவனத்தில் 2வது முறையாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
டெஸ்லா
எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் இந்த வருடத்தின் துவக்கத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் 2வது அலை பணிநீக்கம் சர்வதேச பொருளாதாரம் 2023 வரையில் மந்த நிலையில் இருக்கும் என்ற கணிப்பு பரவலாக வந்த பின்பு டெஸ்லா நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பணிநீக்கம்
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி டெஸ்லா நிறுவனம் புதிதாகப் பணியில் சேர்க்கப்படும் ஊழியர்களை நிறுத்த உள்ளது. இதேவேளையில் பணிநீக்க எண்ணிக்கையை ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா பங்குகள்
டெஸ்லா பங்குகள் இன்று அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தில் 1 சதவீதம் உயர்ந்து $139.25 ஆக இருந்தது.ஆனால் அதிகளவிலான தடுமாற்றம் ஆரம்பம் முதல் தெரிகிறது. இதனால் பணிநீக்க அறிவிப்புகளும் கை கொடுக்கவில்லை என்பது தான் திட்டவட்டமான உண்மை.
விமர்சனம்
எலான் மஸ்க் பொதுத்துறை நிறுவனமும், பல முதலீட்டாளர்கள் பணத்தில் இயங்கும் டெஸ்லா-வை கவனிக்காமல் டிவிட்டரில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருவது அனைத்து முதலீட்டாளர்களையும் வெறுப்பேற்றியுள்ளது.
சிஇஓ காணோம்
எலான் மஸ்க் டிவிட்டருக்காக டெஸ்லா-வை கைவிட்ட நிலையில், அவர் முழுநேர சிஇஓ-வாக இல்லாமல் உள்ளார். இந்த நிலையில் டெஸ்லா-வுக்குப் புதிய முழுநேர சிஇஓ வேண்டும். டெஸ்லா நிர்வாகக் குழு என்ன செய்யப்போகிறது..? என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் டெஸ்லா முதலீட்டாளர் KoGuan Leo.
பங்கு விற்பனை
எலான் மஸ்க் கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய நாளில் இருந்து எலான் மஸ்க் சான் பிரான்சிஸ்கோ டிவிட்டர் அலுவலகத்திலேயே தான் குடியிருக்கிறார்.
விற்பனை சரிவு
இதன் விளைவாகத் தான் தற்போது டெஸ்லா சீனாவின் தேவையில் உருவாகியுள்ள மந்த நிலை அடுத்த ஆண்டு எலக்ட்ரிக் கார் விற்பனை சரியும் என்பதைக் கணித்து எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிர்வாகம் திடீர் முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா
கிட்டத்தட்ட இதே நிலை தான் அமெரிக்கா, ஐரோப்பாவிலும் இதனால் அடுத்த மூன்று மாதங்களில் டெஸ்லா தனது நிரந்தர ஊழியர்களில் தோராயமாக 4 -5 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யலாம். மஸ்க் ஜூன் மாத அறிவிப்பில் 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார்.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications