இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தை எப்படியாவது கொண்டு வர வேண்டும் என மத்திய அரசும், இந்தியாவில் எப்படியாவது டெஸ்லா கார்களை வரி தள்ளுபடி உடன் விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் எலான் மஸ்க்கும் இருக்கும் வேளையில், டெஸ்லா தனது அலுவலகத்தை இந்தியாவில் திறந்துள்ளது.
டெஸ்லா நிறுவன அதிகாரிகள் அடுத்தடுத்து மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்து வரும் வேளையில் இந்தியாவில் டெஸ்லா வருவதலும், உற்பத்தி தளத்தை அமைப்பதிலும் முக்கிய முன்னேற்றமாக Tesla India Motor & Energy Pvt Ltd புனே விமன் நகரில் உள்ள பஞ்ச்ஷில் பிஸ்னஸ் பார்க்-ல் புதிய அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.

எலான் மஸ்க் சில வருடங்களுக்கு முன்பு Tesla India Motor & Energy Pvt Ltd நிறுவனத்தை உருவாக்கினார், அதற்கு முன்பு இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகம் செய்வதற்காக பெங்களூரில் ஸ்பேஸ்எக்ஸ் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்தியாவில் டிவிட்டர் அலுவலகம் ஏற்கனவே உள்ளது, இதனால் இந்தியாவில் டெஸ்லா அலுவலகத்தை புனே-வில் துவங்கியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா புனே பஞ்ச்ஷில் பிஸ்னஸ் பார்க்-ன் B Wing பிரிவில் முதல் ஃப்லோரில் சுமார் 5850 சதுரடி கொண்ட அலுவலக இடத்தை 5 வருடத்திற்கு குத்தகை எடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை Tablespace Technologies நிறுவனத்துடன் செய்த டெஸ்லா மாதம் 11.65 லட்சம் ரூபாய் வாடகையும், செக்யூரிட்டி டெப்பாசிட் ஆக 34.95 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது.
இந்த குத்தகை ஒப்பந்தத்தில் 5 கார் பார்க்கிங், 10 பைக் பார்க்கிங் அளிக்கப்பட உள்ளது. 60 மாதங்களுக்கு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் 36 மாதங்களை லாக்இன் காலமாக முடிவு செய்யதுள்ளது. மேலும் மாத வாடகையான 11.65 லட்சம் ரூபாய் தொகை ஒவ்வொரு வருடமும் 5 சதவீதம் உயர்வும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

Tesla India Motor & Energy நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் பெங்களூரில் பதிவு செய்யப்பட்டது, ஆனால் இந்தியாவுக்கு டெஸ்லா வருவதில் தொடர்ந்து தாமதம் இருக்கும் காரணத்தால் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் ஜூன் மாதம் அமெரிக்காவில் எலான் மஸ்க் மற்றும் மோடி சந்திப்பில் மீண்டும் சூடுப்பிடித்துள்ளது.
புனே அலுவலகத்தில் டெஸ்லா இந்தியா பெற்றுள்ள பார்க்கிங் வசதியை பார்க்கும் போது இந்த அலுவலகத்தில் 10 - 15 பேர் மட்டுமே பணியாற்றுவார்கள் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications