டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், எலான் மஸ்க் உத்தரவின் படி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய ஜெர்மனியில் உள்ள தனது ஆலைகளில் வலது பக்க ஓட்டுநர் வாகனங்களின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
இதன் மூலம், உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார் சந்தையான இந்தியாவில் நுழைவதற்கான நடவடிக்கைகளை டெஸ்லா உறுதிப்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு குழு இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை தேட வருகிறது.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 2- 3 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. முதலீட்டுத் திட்டம், தொழிற்சாலை இடங்கள் அமைக்கப்படும் இடம், டெஸ்லா குழு இந்தியாவுக்கு வருவது என அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே உள்ளது.
மத்திய அரசு கடந்த மாதம், வெளிநாட்டு எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் இத்துறையின் அதிநவீன தொழில்நுட்பத்தை ஈர்க்க புதிய EV பாலிசியை கொண்டு வந்தது. இந்த கொள்கை மூலம் குறைந்தது 500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து, மூன்று ஆண்டுகளுக்குள் உற்பத்தியைத் தொடங்கினால், குறிப்பிட்ட மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரி விகிதத்தைக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஒரு அறிவிப்பு எலான் மஸ்க் நீண்ட காலமாகக் கேட்டு வந்த வரி குறைப்பு கிடைத்தது. புதிய கொள்கையின் கீழ், முதலீடு செய்யும் நிறுவனங்கள் குறைந்த வரி விகிதத்தில் ஆண்டுக்கு 8,000 வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.
டெஸ்லா இந்தியாவில் முதலீடு, தொழிற்சாலை அமைப்பது குறித்து உறுதி செய்துவிட்டால் ஜெர்மனி நாட்டின் பெர்லின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கார்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக டெஸ்லா நிறுவன அதிகாரிகள் இந்தியாவிற்கு பலமுறை பயணம் செய்துள்ளனர். மேலும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், கடந்த ஜூன் மாதம் நியூயார்க்கில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த அனைத்து சந்திப்புகளும் வரி சலுகையில் வந்த தோல்வி அடைந்தது.
டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகை, அதன் முதன்மை சந்தைகளான அமெரிக்கா மற்றும் சீனாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை குறைந்து வரும் வேளையில் இந்தியா முக்கிய சந்தையாக மாறுகிறது.


Click it and Unblock the Notifications