உலகின் முன்னணி எலக்டிரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் சிஇஓ எலான் மஸ்க் - பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின்பு, இந்தியாவில் விரைவில் வர உள்ளதாக அறிவித்தார். எலான் மஸ்க் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் டெஸ்லா அதிகாரிகள் மத்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர். இதன் மூலம் டெஸ்லா-வின் இந்திய கனவு புத்துயிர் பெற்றுள்ளது.
டெஸ்லா அமெரிக்கா மற்றும் டெஸ்லா இந்திய அதிகாரிகள் இணைந்து மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் உடனான சந்திப்பில், இந்தியாவில் தனது ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தி செயின்-ஐ கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. இதற்கான வரி தள்ளுபடி, ஊக்கத்தொகை அளவீடுகள் ஆகியவை குறித்து மத்திய அரசு அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் டெஸ்லா இந்தியாவில் இருக்கும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களைப் பயன்படுத்தாமல் தனது சொந்த சப்ளையர் நிறுவனங்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து, தனது உற்பத்தி பணிகளுக்குத் தேவையான அனைத்து உதிரிபாகங்களையும் இந்திய மண்ணில் இந்திய ஊழியர்களை வைத்துத் தயாரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது கிட்டத்தட்ட ஆப்பிள் செய்வது போலத் தான், ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க முடிவு செய்த பின்பு தனது முன்னணி சப்ளையர்களான பாக்ஸ்கான், விஸ்திரான், பெகாட்ரன் ஆகியவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது, இதேபோல டெஸ்லாவும் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் டெஸ்லா தனது உதிரிபாகங்களின் தரத்தை உலகளவில் ஒரே நிலையில் உறுதி செய்ய முடியும்.
டெஸ்லா இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்ய வரி சலுகையைக் கேட்டு சில வருடங்களாக இந்திய அரசுடன் போராடி வருகிறது, இப்படியிருக்கையில் முன்பு கூறிய திட்டத்தை அதாவது உதிரிபாகங்கள் தயாரிப்பு திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. கார் தயாரிப்புக்கான திட்டத்தை முன்வைக்காதது பெரும் ஏமாற்றம் இந்தியாவில் டெல்ஸா-வுக்கான இன்பராஸ்டக்ச்சர் இல்லை என்பது இந்நிறுவனத்தின் கருத்து.

இன்பராஸ்டக்சர் என்பது டெஸ்லா கார்களை பயன்படுத்துவதற்கு மட்டும் அல்லாமல் டெஸ்லா கார்களை தயாரிப்பதற்கும் போதுமானதாக இல்லை என Roth Capital Partners-ன் நிர்வாக இயக்குனர் Craig Irwin தெரிவித்துள்ளார். இதனாலேயே உற்பத்திக்கான மக்கள்தொகை இருந்தும் இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையை அமைக்க தயங்குகிறது. எனவே தான் மீண்டும் மீண்டும் உதிரிபாகங்கள் தயாரிப்பு திட்டத்தை மத்திய அரசிடம் டெஸ்லா முன்வைக்கிறது.
இந்தியாவில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும், அதற்கான எகோசிஸ்டமும் சிறப்பாக இருக்கும் வேளையில் எதற்காக வெளிநாட்டு சப்ளையர்களை (டெஸ்லா-வின் சப்ளையர்) இந்தியாவுக்கு அழைக்க வேண்டும் என SIAM அமைப்புடன் நடந்த கூட்டத்தில் கேள்வி எழுந்துள்ளது.
மோடி அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமா..? மேலும் டெஸ்லா அதிகாரிகள் தனது நிறுவனத்திற்கான ஸ்பெஷல் சலுகை உள்ளதா என்றும் மத்திய அரசு அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் மற்றும் ப்ரீமியம் போன்களின் உற்பத்தியில் இந்தியாவில் போதுமான அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் இல்லாததால் ஆப்பிள் தனது சப்ளையர்களை கொண்டு வந்தது.

ஆனால் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் பல வருடம் அனுபவம், ஏற்றுமதி சந்தைக்கான தரம் மேம்பாடுகள் இந்தியாவில் இருக்கும் வேளையில் டெஸ்லா இத்துறையில் தனது சொந்த சப்ளையர்களை கொண்டு வருவது சரியா..?
இதே சப்ளையர்கள் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உடன் கூட்டணியில் தொழிற்சாலை அமைத்தால் குறிப்பிடத்தக்கப் பலன் கிடைக்கும். ஆனால் டெஸ்லா இந்திய நிறுவனங்கள் உடன் நேரடியாக கூட்டணி வைத்து வர்த்தகம் செய்தால் இரு தரப்பும் பலன் பெறும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications