ரூ.6 லட்சத்திற்கே Tesla கார்.. எலான் மஸ்க் நிறுவனம் இந்தியர்களுக்கு வெளியிட்ட சூப்பர் சலுகை…!!

உலகின் புகழ்பெற்ற மின்சார கார் நிறுவனமாக டெஸ்லா இருக்கிறது. எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவன மின்சார கார்களை வாங்கி பயன்படுத்துவது ஒரு கெத்து தான். இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் டெஸ்லா நிறுவன கார்கள் விற்பனைக்கு வந்தன.

இந்தியாவில் மிகப்பெரிய விற்பனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் கால் பதித்தது. ஆனால் எதிர்பார்த்த விற்பனை நடக்கவில்லை. இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே டெஸ்லா நிறுவன கார்களுக்காக புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி கையில் 6 லட்சம் ரூபாய் இருந்தாலே போதும் டெஸ்லா கார் உங்களுக்கு சொந்தமாகிவிடும்.

ரூ.6 லட்சத்திற்கே Tesla கார்.. எலான் மஸ்க் நிறுவனம் இந்தியர்களுக்கு வெளியிட்ட சூப்பர் சலுகை…!!

டெஸ்லா நிறுவனம் தனது Model Y காரை இந்தியாவில் வாங்குபவர்களுக்காக ஒரு புதிய, எளிமையான திட்டத்தை (Ease of Ownership Programme) அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி நீங்கள் வெறும் 6 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி Model Y டெஸ்லா காரை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். அதன் பிறகு, இதற்கான மாதத் தவணை தோராயமாக 39,990 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

டெஸ்லா இந்தியாவின் தலைவர் சரத் அகர்வால் இதுகுறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில் பொதுவாக ஒரு பெட்ரோல் காரை வைத்திருப்பவர்கள் எரிபொருள் (பெட்ரோல்) மற்றும் பராமரிப்பிற்காக மட்டுமே மாதம் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை செலவிடுகிறார்கள். அதுவே அவர்கள் டெஸ்லா மின்சாரக் காரை (E-Lease முறையில்) வாங்கும்போது, இந்த 20,000 ரூபாய் பெட்ரோல் செலவு மிச்சமாகிறது என்கிறார். அதாவது, நீங்கள் கட்டும் மாதத் தவணையான ரூ.39,990-ல் இந்த ரூ. 20,000 சேமிப்பைக் கழித்துப் பார்த்தால், வெறும் 20,000 ரூபாய் கூடுதல் செலவில் உலகின் பாதுகாப்பான மற்றும் அதிகம் விற்பனையாகும் ஒரு காரை ஓட்ட முடியும் என்கிறார்.

மற்ற கார்களைப் போல 6 மாதத்திற்கு ஒருமுறை அல்லது 10,000 கிலோமீட்டருக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டிய கட்டாயம் டெஸ்லா கார்களுக்கு இல்லை. இதற்கு மிகக் குறைந்த பராமரிப்பே போதுமானது என்கிறார். காரில் ஏதேனும் சிறிய தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டால், நீங்கள் சர்வீஸ் சென்டருக்குப் போக வேண்டியதில்லை. டெஸ்லா நிறுவனம் ஆன்லைன் (Software) மூலமாகவே அதை சரிசெய்துவிடும் என கூறுகிறார்.

ஆன்லைனில் சரிசெய்ய முடியாத பிரச்சினைகளுக்கு, டெஸ்லாவின் நடமாடும் சேவை குழு (Mobile Service Team) மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் 24 மணி நேரமும் உதவி செய்யத் தயாராக இருக்கும் என்பதால் இந்தியர்களுக்கு இது மிகவும் லாபம் தரும் ஒரு சலுகை என்கிறார்.

டெஸ்லா தனது புதிய Experience Centreஐ ஹைதராபாத்தில் திறந்துள்ளதோடு, இந்தியா முழுவதும் தனது விற்பனையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கார் வாங்க வங்கிகள் கடன் தருகின்றன, அதற்கு நாம் வட்டியுடன் சேர்த்து பணத்தை திரும்ப த்ருகிறோம், அதுவே இந்த திட்டத்தில் நேரடியாக டெஸ்லாவிற்கே உங்கள் பணம் செல்கிறது.

பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தி, குறைந்த முன்பணத்தில் ஒரு பிரீமியம் எலக்ட்ரிக் காரை இந்தியர்களுக்கு சொந்தமாக்குவதே டெஸ்லாவின் இந்த புதிய திட்டத்தின் நோக்கம் என அவர் கூறுகிறார். இந்தியாவில் டெஸ்லாவின் model y கார் இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது. Premium RWD கார் சுமார் 51 லட்சத்திற்கும், L Premium AWD கார் 61 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவ்வளவு பணம் கொடுத்து வாங்க முடியாது ஆனாலும் டெஸ்லா கார் தான் வேண்டும் என்பவர்களுக்காகவே இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+