உலகின் மகிப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ் கடந்த ஒரு வருடத்தில் வருமான வரி செலுத்தவும், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கவும் டெஸ்லா பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறார்.
இதுமட்டும் அல்லாமல் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்பு எலான் மஸ்க் சான் பிரான்சிஸ்கோ டிவிட்டர் அலுவலகத்திலேயே தான் குடியிருக்கிறார்.
இதனால் டெஸ்லா வளர்ச்சியும், பங்கு மதிப்பும் கடுமையாகப் பாதிக்கப்படும் என டெஸ்லா முதலீட்டாளர்கள் எலான் மஸ்க்-ஐ கடுமைமை விமர்சனம் செய்து வருகின்றனர்.
டெஸ்லா
டெஸ்லா நிறுவனத்தில் 3வது பெரிய முதலீட்டாளர் எனத் தனது டிவிட்டர் கணக்கில் போட்டுக்கொண்டு உள்ள KoGuan Leo டாப் 10 பட்டியலில் கூட இல்லை என்பது தான் உண்மை, ஆனால் KoGuan Leo ஆரம்பக்கட்ட முதலீட்டாளர் என்பதால் நிர்வாகக் குழுவில் இவரின் ஆதிக்கம் சற்று அதிகம்.
KoGuan Leo டிவிட்டர் பதிவுகள்
இந்த நிலையில் தான் KoGuan Leo தனது டிவிட்டர் கணக்கில் எலான் மஸ்க்-ஐ தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார். டிசம்பர் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கொண்ட எலான் மஸ்க் செமயாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.
எலான் மஸ்க்
இதைத் தொடர்ந்து டிவிட்டரில் எலான் மஸ்க், டெஸ்லா-வில் முதலில் முதலீடு செய்தது நான் தான், கடைசியாகச் செல்வது நான் என டெஸ்லா பங்குதாரர்களுக்குத் தெரிவித்துக்கொண்டார். 2003ல் டெஸ்லா மோட்டார்ஸ் முதன் முதலில் முதலீட்டை திரட்டிய போது சீரியஸ் ஏ ரவுண்டில் 7.5 மில்லியன் டாலரை திரட்டியது, இதில் 6.5 மில்லியன் டாலரை எலான் மஸ்க் முதலீடு செய்தார்.
பைபேக் திட்டம்
இதைத் தொடர்ந்து சீன நாட்டவரான KoGuan Leo தனது டிவிட்டரில் டெஸ்லா நிர்வாகம் பைபேக் திட்டத்தை அறிவித்தால் முதலீடு செய்ய நான் தயார் எனப் பதிவிட்டார், சந்தையில் இருக்கும் டெஸ்லா பங்குகளைக் குறைக்க வேண்டும்.
எலான்-ஐ கிண்டல் செய்யும் KoGuan Leo
எலான் முடிந்தால் நீங்களும் முதலீடு செய்யுங்க என மஸ் கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்ததை விமர்சனம் செய்தார், இது மட்டும் அல்லாமல் டெஸ்லா பங்குகள் தற்போது சீப்-ஆன விலையில் கிடைக்கிறது, யார் வேண்டுமானாலும் வாங்கலாம் எனத் தெரிவித்தார்.
வெறும் கூலிக்காரர்..
இதோடு விட்டாரா KoGuan Leo, எலான் மஸ்க் பொதுத்துறை நிறுவனமும், பல முதலீட்டாளர்கள் பணத்தில் இயங்கும் டெஸ்லா-வை கவனிக்காமல் டிவிட்டரில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருவது அனைத்து முதலீட்டாளர்களையும் வெறுப்பேற்றியுள்ளது, இதனால் KoGuan Leo எலான் மஸ்க் வெறும் கூலிக்காரர், அவர் முதலீட்டாளர்களின் ஊழியர்.
குழந்தை இல்லை
ஆப்பிள் நிறுவனத்திற்கு எப்படி டிம் குக் இருக்கிறாரோ, அதேபோல் தான் எலான் மஸ்க். டெஸ்லா உருவாகி 19 வருடம் ஆச்சு, S&P-யில் 2.4 சதவீத பங்கீட்டைக் கொண்டு 4வது பெரிய நிறுவனமாக உள்ளது, எனவே டெஸ்லா ஒகு குழந்தை இல்லை.
புதிய முழுநேர சிஇஓ
எலான் மஸ்க் டிவிட்டருக்காக டெஸ்லா-வை கைவிட்ட நிலையில், அவர் முழுநேர சிஇஓ-வாக இல்லாமல் உள்ளார். இந்த நிலையில் டெஸ்லா-வுக்குப் புதிய முழுநேர சிஇஓ வேண்டும். டெஸ்லா நிர்வாகக் குழு என்ன செய்யப்போகிறது..? என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டெஸ்லா நிர்வாகம் எலான் மஸ்க்-ஐ சிஇஓ பதவியில் நீக்கினால் அவருடைய 303 மில்லியன் பங்குகள் பேகேஜ் முழுமையாகக் கிடைப்பது கடினம்.
பங்குதாரர்கள்
டெஸ்லா நிறுவனத்தின் பெரிய பங்குதாரர்கள் பட்டியல்
எலான் மஸ்க் - 13.4 சதவீதம்
வேன்கார்டு குரூப் - 6.8 சதவீதம்
பிளாக்ராக் - 5.4 சதவீதம்
ஸ்டேட் ஸ்ட்ரீட் குளோபல் அட்வைசர்ஸ் - 3.2 சதவீதம்
கேபிடல் ரிசர்ச் அண்ட் மேனேஜ்மென்ட் - 3.1 சதவீதம்
Geode capital மேனேஜ்மென்ட் - 1.5 சதவீதம்
T.Rowe price குரூப் - 1.3 சதவீதம்
லேரி எலிசன் - 1.4 சதவீதம்
Fidelity - 1.1 சதவீதம்
ஜென்னிசன் அசோசியேட்ஸ் - 0.9 சதவீதம்


Click it and Unblock the Notifications