கர்நாடகாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை.. எடியூரப்பா அதிரடி..!

உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது வர்த்தகத்தை அமெரிக்காவைத் தொடர்ந்து உலகில் பல நாடுகளில் விரிவாக்கம் செய்து வருகிறது. உலக நாடுகளில் தற்போது டெஸ்லா கார்களுக்கான டிமாண்டு அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு சீனா மற்றும் ஜெர்மனியில் மிகப்பெரிய தொழிற்சாலை உருவாக்கியுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் பல ஆண்டுகள் ஆலோசனைக்குப் பின்பும் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் நேரடி விற்பனையைத் துவங்க, பெங்களூரில் அலுவலகத்தை அமைக்க முடிவு செய்து இந்தியாவில் புதிய அலுவலகத்தைத் துவங்கப் பதிவு செய்துள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கர்நாடக முதல்வர் எடியூரப்பா

இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெஸ்லா கூடிய விரைவில் கர்நாடக மாநிலத்தில் தொழிற்சாலை துவங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையின் முக்கியமான திட்டங்களை மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் கன்னட மொழியில் இம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிக்கை வெளியிட்டார்.

 

டெஸ்லா தொழிற்சாலை

டெஸ்லா தொழிற்சாலை

இந்த அறிக்கையில் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா கர்நாடகாவில் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. இதுவரை டெஸ்லா தரப்பில் இருந்து இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பது குறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் கர்நாடக முதல்வரின் அறிவிப்புப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் டெஸ்லா அலுவலகம்

பெங்களூரில் டெஸ்லா அலுவலகம்

சமீபத்தில் டெஸ்லா தனது முதல் இந்திய அலுவலகத்தைத் துவங்குவதற்காக இந்தியாவின் டெக்னாலஜி தலைநகரமான பெங்களூரில் டெஸ்லா மோட்டார்ஸ் இந்தியா மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனது இந்திய நிறுவனத்தைப் பதிவு செய்துள்ளது.

எடியூரப்பா டிவீட்

எடியூரப்பா டிவீட்

இந்த அறிவிப்பு வெளியான போது கர்நாடக மாநில முதல்வர் பிஎஸ் எடியூரப்பா தனது டிவிட்டரில், டெஸ்லா தனது இந்திய வர்த்தகத்தை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவுடன் பெங்களூரில் அலுவலகத்தைத் துவங்குகிறது என டிவீட் செய்தார். ஆனால் டிவீட் செய்த சில நிமிடத்திலேயே இந்த டிவீட் டெலிட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா மற்றும் கர்நாடக அரசு விளக்கம்

டெஸ்லா மற்றும் கர்நாடக அரசு விளக்கம்

இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் பிஎஸ் எடியூரப்பா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட டெஸ்லா தொழிற்சாலை குறித்த ரெயூட்டர்ஸ் டெஸ்லா இந்தியா மற்றும் கர்நாடக முதல்வர் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது, ஆனால் இதுவரையில் எவ்விதமான அளிக்கவில்லை.

எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள்

இந்தியா பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி மற்றும் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள நிலையில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஆதரிக்க மத்திய அரசு துவங்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்குத் தேவையான சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதில் முதலீட்டு அளவு குறைவாக உள்ளது.

சார்ஜிங் ஸ்டேஷன்

சார்ஜிங் ஸ்டேஷன்

குறிப்பாக இந்தியாவில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பையும், விற்பனையும் துவங்கியுள்ள நிலையில் எலக்ட்ரிக் காருக்கு மிகவும் அவசியமான சூப்பர்சார்ஜிங் அல்லது சார்ஜிங் ஸ்டேஷன் எண்ணிக்கை மிகவும் குறைவு, இதனால் எலக்ட்ரிக் கார் மூலம் நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

பேட்டரி தொழிற்சாலை

பேட்டரி தொழிற்சாலை

இதேவேளையில் மத்திய அரசு மேம்படுத்தப்பட்ட பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையை அமைப்பதற்குச் சுமார் 4.6 பில்லியன் டாலர் அளவிலான ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் காரணிகளைக் களைய வேண்டும் என்பதற்காக எலக்ட்ரிக் வாகன பிரிவை ஊக்குவிக்கத் துவங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+