அமெரிக்க எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் பெரும் நம்பிக்கையுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்நிறுவனத்தின் கார் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. முதல் கட்டமாக டெஸ்லா இறக்குமதி செய்த 300 கார்களில் 200 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ள நிலையில் மீதமுள்ள கார்களை ரகசியமாக 2 லட்சம் ரூபாய் வரையிலான தள்ளுபடியில் விற்பனை செய்ய துவங்கியுள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் பல இடத்தில் புதிய ஷோரூம்-களை திறக்க முடிவு செய்துள்ள டெஸ்லா நிர்வாகம் அதிகளவிலான ஊழியர்களை பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை உட்பட நாட்டில் பல இடங்களில் இன்டர்ன்ஷிப் அளிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெஸ்லா தற்போது டெல்லி, மும்பை, குர்கிராம் ஆகிய நகரங்களில் ஷோரூம் வைத்திருக்கும் வேளையில் அடுத்தாக பெங்களூரில் ஷோரூம் திறக்க உள்ளதாக 9ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில் அடுத்தாக சென்னையில் இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
டெஸ்லா தற்போது டெல்லி, மும்பை, குர்கிராம், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, புனே, அகமதாபாத் ஆகிய 8 முக்கிய நகரங்களில் சேல்ஸ் இன்டர்ன்களை நியமிக்க தயாராகி வருகிறது. இந்த பணியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் உலகளாவிய பிராண்டுகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக உள்ளது.
டெஸ்லாவுக்கு இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் தனது வர்த்தக மாடலில் விற்பனை குழுவுக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கார்களை விற்பது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் முழுமையான அனுபவத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். எப்படி ஆப்பிள் நிறுவனம் அதன் கடைகளில் திறன்வாய்ந்த நபர்களை நியமித்து வாடிக்கையாளர்களுக்கு 360 டிகிரியிலும் சேவை அளித்து நம்பிக்கையான, நீண்ட கால வாடிக்கையாளர்களை பெற்றதோ அதேபோல் டெஸ்லா தனது சேல்ஸ் மற்றும் ஷோரூம் ஊழியர்களை மிகவும் முக்கியமானதாக பார்க்கிறது.
இன்டர்ன்ஷிப் பயிற்சியில் தேர்வாகும் நபர்கள் டெஸ்லா ஷோரூம்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் முதல் முக்கிய கான்டெக்ட் புள்ளியாக இருப்பார்கள். டெஸ்லா கார்கள், அதன் தொழில்நுட்பம், நிறுவனத்தின் கிளீன் மற்றும் ஸ்டேபிள் எனர்தி இலக்கு ஆகியவற்றை விளக்கும் முக்கிய நபர்களாக இருப்பார்கள்.
நிறுவனம் இந்த இன்டர்ன்ஷிப்பை நடைமுறை அனுபவ அடிப்படையிலானதாக வடிவமைத்துள்ளது. இன்டர்ன்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுடன் பேசுவார்கள். வாகன அம்சங்களை விளக்குவார்கள். டெஸ்ட் டிரைவ் பதிவு செய்ய உதவுவார்கள். இப்படி ஷோரூம்-க்கு வரும் வாடிக்கையாளர்களை ஒரு பையராக மாற்றும் அனைத்து பணியிலும் ஈடுப்படுவார்கள்.
இது மட்டும் அல்லாமல் இந்தியாவில் டெக் பணிகளுக்கான ஆட்கள் தேடும் பணிகளை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications