கனடாவில் தொழிற்சாலை அமைக்கும் டெஸ்லா.. வாய்ப்பை இழந்த இந்தியா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது கார்களை நேரடியாக விற்பனை செய்யப் பல சலுகைகளைக் கேட்ட நிலையில் மத்திய அரசு தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தியது, இதற்காகப் பல கட்ட ஆலோசனைக்கு பின்பும் விற்பனைக்கு மறுத்தது.

 

ஒருபக்கம் இந்தியாவில் போட்டி தன்மையை நிலை நிறுத்த மத்திய அரசின் முடிவு சரி எனக் கூறப்பட்டாலும், மறுபக்கம் டெஸ்லா போன்ற முக்கியமான மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனத்தை இழந்தது பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது.

டெஸ்லா அடுத்த சில ஆண்டுகளுக்குப் புதிய தொழிற்சாலையைத் திறக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

6 நாள் உயர்வுக்கு முற்றுப்புள்ளி.. 52 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..! 6 நாள் உயர்வுக்கு முற்றுப்புள்ளி.. 52 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!

டெஸ்லா

டெஸ்லா

இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முடியாது என மறுத்துவிட்ட எலான் மஸ்க்-ன் டெஸ்லா தற்போது கனடா நாட்டில் அதிநவீன உற்பத்தி தளத்தை அமைக்க அந்நாட்டின் ஒன்டாரியோ மாகாண அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது. டெஸ்லா சமீபத்தில் தான் அமெரிக்காவில் டெக்சாஸ்-ல் புதிய தொழிற்சாலையை திறந்தது குறிப்பிடத்தக்கது.

கனடா

கனடா

டெஸ்லா நிறுவனத்தின் கனடா நாட்டு கிளை தொழில்துறை கட்டமைப்புகளைத் திறக்க அனுமதிக்கும் விதிமுறைகளை அடையாளம் காண ஒன்டாரியோ மாகாண அரசு உடன் இணைந்து செயல்பட்டு வருவதாக டெஸ்லா ஜூலை 18 திருத்தப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

 கனடா தொழில்துறை அமைச்சர்
 

கனடா தொழில்துறை அமைச்சர்

கனடா நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகன விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் பல நிறுவனங்கள் உடன் மிகவும் சுறுசுறுப்பான விவாதங்கள் நடைபெற்று வருவதாக மே மாதம் கனடா நாட்டின் தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Shampagne கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் டெஸ்லா-வும் முக்கியமானதாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

 கார் உற்பத்தி

கார் உற்பத்தி

எலான் மஸ்க் வழிகாட்டுதலின் படி டெஸ்லா தனது கார் உற்பத்தியைப் பெரிய அளவில் மேம்படுத்தி வருகிறது, மேலும் பங்குதாரர்கள் உடன் நடந்த கூட்டத்தில் எலான் மஸ்க் இந்த வருடத்தின் இறுதிக்குள் புதிய தொழிற்சாலையைக் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளார்.

 12 ஜிகாபேக்டரி

12 ஜிகாபேக்டரி

டெஸ்லா தற்போது அமெரிக்காவில் இரு தொழிற்சாலைகள், ஜெர்மனி மற்றும் சீனாவில் தலா ஒரு தொழிற்சாலை என மொத்தம் 4 தொழிற்சாலைகள் உடன் இயங்கி வருகிறது. டெஸ்லா அதிகப்படியாக 10 - 12 ஜிகாபேக்டரிகளைக் கொண்டு இயங்க திட்டமிட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tesla plans to open advanced manufacturing facility in canada; Elon musk hints shareholder meet

Tesla plans to open advanced manufacturing facility in canada; Elon musk hints shareholder meet கனடாவில் தொழிற்சாலை அமைக்கும் டெஸ்லா.. வாய்ப்பை இழந்த இந்தியா..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X