உலகின் மிகப் பெரிய பிரீமியம் எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவின் 3-ம் காலாண்டு முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின.
இந்த முடிவுகள் வால் ஸ்ட்ரீட் வல்லுநர்கள் கணிப்பை பொய்யாக்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
2022-ம் நிதியாண்டின் 3-ம் காலாண்டில் டெஸ்லா நிறுவனம் 21.96 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் என வல்லுநர்கள் கணித்து இருந்தனர்.
எலன் மஸ்க்
டெஸ்லாவின் 3-ம் காலாண்டு முடிவுகள் வியாழக்கிழமை வெளியாக இருந்த நிலையில், புதன் கிழமை காலாண்டு அறிக்கை குறித்த தகவலை கசிய விட்ட அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க், இந்த ஆண்டு அதன் வாகன விற்பனை இலக்குகளை நிறுவனம் தவறவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து இருந்தார்.
காலாண்டு முடிவுகள்
அதனை உறுதி செய்யும் விதமாகவே டெஸ்லா நிறுவனத்தின் 3-ம் காலாண்டு முடிவுகள் இருந்தன. 3-ம் காலாண்டில் டேஸ்லா நிறுவனம் 21.45 பில்லியன் டாலர் வருவாயை பெற்றுள்ளது.
நிகர லாபம்
சென்ற ஆண்டு இதே காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் நிகர லாபம் 1.62 பில்லியன் டாலராக இருந்தது. இந்த ஆண்டு அது கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 3.3 பில்லியன் டாலரை டெஸ்லா பெற்றுள்ளது.
முக்கிய காரணம்
டெஸ்லா நிறுவனத்தின் இந்த வருவாய் சரிவுக்கு எதிர்மறை அந்நிய செலாவணி தாக்கம் தான் காரணம் என தெரிவித்துள்ளது. பிற நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்ததால், கிட்டத்தட்ட 250 மில்லியன் டாலர் வருவாயை டெஸ்லா இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பங்குகள் மற்றும் டிமாண்ட்
காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததால், முடிவுகள் அறிவிப்புக்குப் பிறகு டெஸ்லா பங்குகள் மதிப்பு 6.3 சதவீதம் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிதியாண்டின் 4-ம் காலாண்டில் டெஸ்லா காருக்கு அதிகம் டிமாண்ட் உள்ளது. ஆனால் லாஜிஸ்டிக்ஸ் தான் பெரும் சவாலாக உள்ளது என எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
போட்டி
டெஸ்லான் நிறுவனம் ஒரு பக்கம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நாங்கள் வந்தால் டெஸ்லா எல்லாம் ஒரம் போக வேண்டியதுதான் என ஒலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ந்து எலக்ட்ரிக் காரை தயாரித்து வருகிறது. இந்திய சந்தைக்கு டெஸ்லா வர வரி முக்கிய தடையாக இருப்பதாகக் கூறி வரும் நிலையில், இந்திய நிறுவனங்கள் டாடா, மஹிந்தரா நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் சந்தையை தங்கள் வசம் கையாகப்படுத்தி வருகின்றன.


Click it and Unblock the Notifications