இந்தியாவில் வெறும் 24000 டாலர் மதிப்புள்ள எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை டெஸ்லா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கான முடிவும் தீர்வுகளும் இருபுறமும் எட்டப்படாத நிலையில், அடுத்த திட்டத்துடன் டெஸ்லா மத்திய அரசு அதிகாரிகளை அணுகியுள்ளது.
எலான் மஸ்க் இந்தியாவுக்கு டெஸ்லா-வை கொண்டு வருவதிலும், தனது நிறுவன தயாரிப்பை நேரடியாக விற்பனை செய்ய மிகவும் ஆர்வமாக இருந்தாலும், இதற்காக மத்திய அரசிடம் டெஸ்லா கேட்கும் சலுகைகள் தான் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இதனாலேயே ஒவ்வொரு முறையும் டெஸ்லா - மத்திய அரசு மத்தியிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது.

இந்த நிலையில் டெஸ்லா தற்போது இந்தியாவில் பேட்டரியை தயாரிக்கவும், அதன் எனர்ஜி ஸ்டோரேஜ் சேவையான பவர்வால்-ஐ இந்தியாவில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அதிகாரிகளிடம் டெஸ்லா உயர் அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.
டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை தாண்டி சோலார் பேனல், எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் என பல சேவைகளை வழங்கி வருகிறது. இதில் முக்கியமானது PowerWall எனப்படும் எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் இந்த கட்டமைப்பு மூலம் சோலார் எனர்ஜி மூலம் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை நாம் விருப்பப்படும் நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்தியாவில் சோலார் எனர்ஜி பயன்பாடு அதிகரிக்கப்பட்ட நிலையில் பவர்வால் சேவைக்கான டிமாண்ட் இருக்கும் என டெஸ்லா நம்புகிறது. ஆனால் டெஸ்லா இதற்கும் அதிகப்படியான மற்றும் மத்திய அரசால் அளிக்க முடியாத மானியங்களையும், சலுகைகளையும் கேட்டுள்ளது. இதற்கு வழக்கம் போல் மத்திய அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் டெஸ்லா சரியான பிஸ்னஸ் மாடலை மானியங்கள் உடன் நீங்களே கொடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையை கொண்டு வர வேண்டும் என்பதில் டெஸ்லா மட்டும் அல்லாமல் மத்திய அரசும் ஆர்வமாக தான் உள்ளது. ஆனால் மானியங்களில் டெஸ்லா வைக்கும் கோரிக்கை சற்றும் ஏற்க முடியாததாக உள்ளது. டெஸ்லா என்னும் ஒரு நிறுவனத்திற்காக சலுகையை கொடுத்தால் அனைத்து நிறுவனங்களும் இத்தகைய சலுகையை கோரும், இது நடைமுறையில் சாத்தியமில்லாததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications