டெஸ்லா-வுக்கு போட்டியாக ரிவியன்.. ஜெப் பைசோஸ் மாஸ்டர் பிளான்..!

உலக நாடுகள் முழுக்கத் தற்போது எலக்ட்ரிக் கார் பயன்படுத்த துவங்கியுள்ள நிலையில், இத்துறையில் முன்னோடியாக இருக்கும் டெஸ்லா எலக்ட்ரிக் கார் மட்டும் அல்லாமல் தானியங்கி கார் தொழில்நுட்பத்திலும் பல சாதனைகளைப் படைத்துள்ளது. இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள டெஸ்லா நிறுவனப் பங்குகள் தாறுமாறான வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்நிலையில் டெஸ்லா-வுக்குப் போட்டியாகப் பல நிறுவனங்கள் இருந்தாலும், எலான் மஸ்க் உடன் அனைத்து துறையிலும் போட்டிப்போடும் ஜெப் பைசோஸ் முதலீட்டில் இயங்கும் ரிவியன் மீது அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களுக்கும் ஒரு கண் இருக்கிறது.

 ரிவியன் ஐபிஓ

ரிவியன் ஐபிஓ

டெஸ்லா பங்கு விலை வரலாற்று உச்ச விலையை அடைந்துள்ள வேளையில் ரிவியன் அமெரிக்கப் பங்குச்சந்தையில் சுமார் 65 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது. ரிவியன் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெறவில்லை என்றாலும் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள கார் மாடல்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

 எலான் மஸ்க் - ஜெப் பைசோஸ்

எலான் மஸ்க் - ஜெப் பைசோஸ்

எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் போட்டியாக ஜெப் பைசோஸ் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தைத் துவங்கியது போலவே டெஸ்லாவுக்குப் போட்டியாக ரிவியன் நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயணத்தில் பெரிய வெற்றியை அடைய முடியாக ஜெப் பைசோஸ் ரிவியன் மூலம் எலக்ட்ரிக் கார் துறையில் வெற்றிப்பெறுவாரா..?

 ஐபிஓ திட்டம்

ஐபிஓ திட்டம்

அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிடத் தயாராகியுள்ள ரிவியன் கடந்த வாரம் 53 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஒரு பங்கு விலை 62 டாலர் விலையில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தது.

 10 பில்லியன் டாலர் முதலீடு

10 பில்லியன் டாலர் முதலீடு

இந்நிலையில் நவம்பர் 9ஆம் தேதி ரிவியன் 135 மில்லியன் பங்குகளை 72 -74 டாலர் விலையில் விற்பனை செய்து 10 பில்லியன் டாலர் அளவில் முதலீட்டை திரட்ட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 ஜெப் பைசோஸ் பிரம்மாஸ்திரம்

ஜெப் பைசோஸ் பிரம்மாஸ்திரம்

டெஸ்லா நிறுவனத்தைப் போலவே ரிவியன் நிறுவனத்தில் சந்தையின் பெரும் முதலீட்டாளர்கள் டெஸ்லாவின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்காகவே முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எலக்ட்ரிக் வாகன சந்தையில் டெஸ்லாவின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்காகப் பிரம்மாஸ்திரம் ஜெப் பைசோஸ் பயன்படுத்துகிறார்.

 அலிபாபா, பேஸ்புக்

அலிபாபா, பேஸ்புக்

அமெரிக்கப் பங்குச்சந்தையில் சீனாவின் அலிபாபா மற்றும் அமெரிக்காவின் பேஸ்புக் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தது 3வது நிறுவனமாக 8 பில்லியன் டாலருக்கும் அதிகமாகத் தொகையை ஐபிஓ மூலம் முதலீடாகத் திரட்ட உள்ளது.

 65 பில்லியன் டாலர் மதிப்பீடு

65 பில்லியன் டாலர் மதிப்பீடு

ரிவியன் வெறும் ஸ்டார்ட்அப் நிறுவனமாக மட்டுமே இருக்கும் நிலையிலும், பெரிய அளவில் கார்களைத் தயாரித்து மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யாத நிலையில் 65 பில்லியன் டாலர் மதிப்பீடு என்பது சற்று அதிகமானதாகக் கருதப்படுகிறது. இது கிட்டதட்ட போர்டு மற்றும் ஜெனர்ல் மோட்டார்ஸ் மதிப்பீட்டுக்கு இணையான ஒன்று.

 55,400 ரிவியன் கார் புங்கிங்

55,400 ரிவியன் கார் புங்கிங்

ரிவியன் தனது எலக்ட்ரிக் கார் உற்பத்தியைப் பெரிய அளவில் மேம்படுத்த வேண்டும் என்பதற்காக அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளது. அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு வர்த்தகச் சந்தையில் இருந்து 55,400 ரிவியன் R1T மற்றும் R1S கார்களுக்குப் புக்கிங் பெற்றுள்ளது.

 டெஸ்லா மதிப்பு

டெஸ்லா மதிப்பு

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனப் பங்குகளின் விலை 1,222.09 டாலராக உள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1.21 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. 2021ல் மட்டும் டெஸ்லா பங்குகள் சுமார் 67.46 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+