உலக நாடுகளை பயமுறுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு-க்கு போட்டியாக எலான் மஸ்க் ஒரு AI நிறுவனத்தை உருவாக்கி வந்தாலும் இதைவிட முக்கியமான விஷயத்தை டெஸ்லா உருவாக்கி வருகிறது.
ஒட்டுமொத்த அறிவாளிகளும் எலான் மஸ்க்-யிடம் தான் இருப்பார்கள் என்பது போல் யாரும் எட்ட முடியாத பல விஷயத்தை மிகவும் எளிதாக சாதித்து வருகிறது எலான் மஸ்க் டீம். கடந்த டெஸ்லா கூட்டத்தில் எலான் மஸ்க், டெஸ்லா தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் ரோபோக்களை உருவாக்கும் திட்டத்தை துவங்கியுள்ளதாக தெரிவித்தார்.

ஆரம்பத்திலேயே இந்த ரோபோ தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்த கூடிய ரோபோ-வாக இருக்கும் என தெரிவித்த எலான் மஸ்க், தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எழுச்சி பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில் எலான் மஸ்க் இதை மக்களின் தினசரி வாழ்வியல் பயன்பாட்டுக்கும் கொண்டு வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஜப்பான், சீனா, அமெரிக்கா என பல நாடுகள் ரோபோ தயாரிப்பில் பல ஆண்டுகளாக பணியாற்றியும் இன்னும் பெரிய அளவிலான முன்னேற்றத்தை humanoid robot பிரிவில் எட்ட முடியாத நிலையில், டெஸ்லா-வும் எலான் மஸ்க் டீமும் ஒரு வருடத்திற்குள்ளேயே சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
அதிலும் டெஸ்லா ரோபோ-க்கள் கோழி முட்டையின் தன்மையை உணர்ந்து செய்யும் செயலை பாருங்க அட அட.. செம..


Click it and Unblock the Notifications