இந்திய சந்தைக்குள் நுழைவதற்கு டெஸ்லா தயாராகி வருகிறது. CLSA என்ற நிறுவனத்தின் அறிக்கையின்படி, இறக்குமதி வரி குறைக்கப்பட்டாலும் டெஸ்லா நிறுவனம் தயாரிக்க உள்ள கார்களின் குறைந்த விலை மாடலின் ஆரம்ப விலையே ரூ. 35 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 கார்களின் உற்பத்தி விலை 35,000 USD டாலர்கள். இந்திய மதிப்புக்கு இது 30.4 லட்ச ரூபாய் ஆகும்.
இந்தியாவில் இறக்குமதி வரி 15 முதல் 20 சதவீதமாக குறைந்தாலும், இதர வரி போன்ற செலவுகளுடன் சேர்த்து மாடல் 3 ரக கார்களின் விலை 40,000 USD டாலர்களுக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்புக்கு ரூ. 35 முதல் ரூ. 40 லட்சமாக இருக்கும். என ANI பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் தனது மாடல் 3 மஹிந்திரா XEV 9e, ஹூண்டாய் இ-க்ரெட்டா மற்றும் மாருதி சுசுகி இ-விட்டாரா போன்ற உள்நாட்டு மின்சார வாகன மாடல்களின் விலையை விட 20 முதல் 50 சதவீதம் வரை அதிகமாக நிர்ணயித்தாலே இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனத்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று CLSA அறிக்கை எச்சரிக்கிறது.
ஏனெனில் எந்த ஒரு பொருளானாலும் விலைதான் அதன் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. ஒரு வேலை உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் ஒப்பிடுகையில் டெஸ்லா நிறுவனம் அதிக விலை நிர்ணயம் செய்தால் மக்கள் உள்நாட்டு வாகனங்களுக்கே முன்னுரிமை அளிக்கக்கூடும்.
டெஸ்லா நிறுவனம் ஒரு வேலை ரூ. 25 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் ஒரு மாடலை அறிமுகப்படுத்தி குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை கைப்பற்ற முயற்சி செய்தாலும், மஹிந்திரா மற்றும் பிற உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
அதோட டெஸ்லா நிறுவனத்தின் நுழைவு இந்திய வாகன உற்பத்தியாளர்களை பாதிக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் இந்தியாவோடு ஒப்பிடுகையில் சீனா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் மின்சார வாகனங்களின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. இந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைந்த அளவில்தான் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வரவிருக்கும் மாதங்களில் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் டெஸ்லா தனது மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்காக டெஸ்லா நிறுவனம் ஆட்சேர்ப்பு செயல் முறையையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களுக்கு சரியான விலையை நிர்ணயிக்க அறிக்கை வலியுறுத்துகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications