எலான் மஸ்க்கின் டெஸ்லா மின்சார கார்களின் யூரோப்பிய விற்பனை 2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே 49 சதவீதம் குறைந்துவிட்டதாக யூரோப்பிய கார் உற்பத்தியாளர்கள் சங்கம் (ACEA) வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 49 சதவீதம் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த ஆண்டு இதுவரை ஏற்பட்ட சரிவுக்கு பழைய மாடல்கள் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முக்கிய ஆதரவாளராக மாறியதால், சில மின்சார கார் வாடிக்கையாளர்கள், எலோன் மஸ்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மின் வாகன வாங்க மறுத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் டொனால்டு டிரம்ப், புதிதாக அரசின் செயல்திறன் துறையை (Department of Government Efficiency - DOGE) உருவாக்கினார். இந்த துறைக்கு
தலைவராக பொறுப்பேற்ற எலான் மஸ்க், அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியில் முன்னிலை வகித்து வருகிறார். இந்த முயற்சிகள், சிலர் பார்வையில் அரசின் முக்கிய சேவைகளை பாதிக்கக்கூடியதாகவும், அரசின் செயல்பாடுகளை மறைக்கக்கூடியதாகவும் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், DOGE துறையின் செயல்பாடுகள் எழுந்து வரும் கருத்துகள் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்கின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சமீபத்திய வாரங்களில் அமெரிக்கா முழுவதும் பல டெஸ்லா விற்பனை நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் கடந்த மாதத்தில் நிறுவனத்தின் பங்கு விலை கடுமையாக சரிந்துள்ளது. இந்தநிலையில், யூரோப்பிய ஒன்றியத்தில் புதிய டெஸ்லா பதிவுகள் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 19,046 ஆக சரிந்துள்ளன, இதனால் நிறுவனத்திற்கு வெறும் 1.1 சதவீத சந்தைப் பங்கு மட்டுமே கிடைத்ததாக ACEA தெரிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி மாதத்தில் மட்டும், டெஸ்லா பதிவுகள் 47 சதவீதம் குறைந்து 11,743 ஆக இருந்தது.
இந்த ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் மொத்த மின்சார வாகன விற்பனை 28.4 சதவீதம் உயர்ந்து 2,55,489 ஆக இருந்தபோதிலும், டெஸ்லாவின் விற்பனை சரிவடைந்துள்ளது. மின்சார வாகனங்களின் சந்தைப் பகிர்வு யூரோப்பிய ஒன்றியத்தில் 15.2 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ACEA இயக்குநர் ஜெனரல் Sigrid de Vries கூறுகையில், "சமீபத்திய புதிய கார் பதிவு புள்ளிவிவரங்கள், பேட்டரி மின்சார வாகனங்களுக்கான சந்தை தேவை பூஜ்ஜிய-உமிழ்வு இயக்கத்திற்கு மாறுவதற்குத் தேவையான அளவை விடக் குறைவாகவே உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு வரி மற்றும் கொள்முதல் ஊக்குவிப்புகள் வழங்குவதன் தேவையும், மின்சார சார்ஜிங் நிலையங்களில் முதலீடு செய்யும் அவசியமும் உள்ளது. இதைத் தொடர்ந்து, பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக் கூறப்படும் யூரோப்பிய கார் உற்பத்தியாளர்களுக்காக, யூரோப்பிய ஒன்றியம் உமிழ்வை குறைக்கும் இலக்குகளை தளர்த்தத் திட்டமிடுகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஹைபிரிட்-மின்சார வாகனங்கள் பெரிய சந்தைப் பிரிவாக தொடர்ந்தன, மேலும், , 5,94,059 பதிவுகளுக்கு உயர்ந்தன. இதனால் 35.2 சதவீத சந்தைப் பகிர்வை பெற்றன. பிப்ரவரியில் 29.1 சதவீதம் மற்றும் 9.7 சதவீத சந்தைப் பங்குகளுடன், பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் இரண்டையும் விட இது முந்தியது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications