அமெரிக்காவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்திய சந்தைக்குள் நுழையத் தயாராகி வருகிறது. இதன் முதல் கட்டமாக மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் பிரம்மாண்டமான ஷோரூமை திறக்கவுள்ளது. வணிக இடங்களுக்கான முக்கியப் பகுதியாக இந்தப் பகுதி இருந்து வருகிறது. மேலும் இங்குள்ள இடங்களுக்கு வாடகை செலவும் அதிகம்.
டெஸ்லா நிறுவனம் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஒரு வணிக கட்டிடத்தின் தரை தளத்தில் 4000 சதுர அடி இடத்தை வாடகைக்கு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு டெஸ்லா நிறுவனம் தனது கார் மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது. இதற்கு மாத வாடகை ஒரு சதுர அடிக்கு சுமார் 900 ரூபாய். அதாவது மாதம் மாதம் சுமார் ரூ. 35 லட்சமாகும். இந்த ஒப்பந்தம் 5 வருடங்களுக்கு போடப்பட்டுள்ளது. டெஸ்லா டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் 2-வது ஷோரூமையும் திறக்க திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றபோது, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கை சந்தித்தார். இவர்களுடைய சந்திப்புக்கு சில வாரங்களுக்கு பிறகு இந்த புதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிவதற்கான 13 வேலைவாய்ப்புகளுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப அதிபராக பதவியேற்றதிலிருந்து பல்வேறு முக்கிய மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் ரெசிப்ரோகல் வரிமுறையை கொண்டு வந்தார். இதனால் இந்தியா அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவியது. ரெசிப்ரோகல் வரிமுறை என்பது எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதோ? அந்தந்த நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப அமெரிக்காவும் வரிவிதிப்பு செயல்முறையை கையில் எடுப்பதாகும்.
இதனால் இந்தியாவிற்குள் டெஸ்லா நுழைவதிலும் சில குழப்பங்கள் நிலவியது. இந்நிலையில் இந்த வரிமுறையை தொடர்ந்து தற்போது இந்தியாவில் ஷோரூமை திறக்க ஆயத்தமாகி வருகிறது.
டெஸ்லா நிறுவனம் பல ஆண்டுகளாக இந்திய சந்தையை கவனித்து வருகிறது. இந்நிறுவனம் முதன்முதலாக 2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் நுழைய திட்டமிட்டது. ஆனால் அந்த திட்டங்களை அப்போது ஏதோ காரணத்தினால் நிறுத்தி வைத்தது. கடந்த ஆண்டு சில்லறை விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகள் மீண்டும் இந்தியாவில் நுழைய ஆயத்தமானது.
இந்திய அரசு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 110 சதவீதம் வரை வரி விதிக்கிறது. இது ஒரு கவலைக்குரிய விஷயம் என்றும்,அதிக வரி காரணமாக டெஸ்லா இந்தியாவில் ஒரு கார் உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
அதோடு சமீபத்திய நேர்காணலில் டெஸ்லா இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதாகவும், உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் வரி மூலம் தங்களை சாதகமாக பயன்படுத்துவதாகவும், இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதால் ஒரு காரை விற்பனை செய்வதே சாத்தியமற்றதாக இருப்பதாகவும் கூறினார்.
இந்தியாவில் டெஸ்லா வாகனங்கள் 21 லட்சம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் EV சந்தையில் பிரீமியம் விலையாக இருக்கும்.
டெஸ்லா சைபர்ட்ரக் - ரூ. 50.70 லட்சம்
டெஸ்லா மாடல் 2 - ரூ. 45 லட்சம்
டெஸ்லா மாடல் 3 - ரூ. 60 லட்சம்
டெஸ்லா மாடல் Y - ரூ. 70 லட்சம்
டெஸ்லா மாடல் S - ரூ. 1.50 கோடி
டெஸ்லா மாடல் X - ரூ. 2 கோடி
இந்திய அரசு இவி வாகனங்களை மக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் விதமாக சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகையை அறிவித்தால் இந்தியாவில் கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications