இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் நுழைவு குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மின்சார வாகன உற்பத்திக்கான ஆன்-டாப் செயல்முறையை இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆன்-டாப் செயல்முறை என்பது ஒரு குறிப்பிட்ட சேவை அல்லது உற்பத்தி சந்தையை பரிசோதித்த பிறகு தொடங்குவதாகும். டெஸ்லா நிறுவனத்தை பொருத்தவரையில் முதலீடு செய்து ஆலை அமைப்பதற்கு முன்பு சந்தை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஒரு அணுகுமுறையாகும்.
டெஸ்லா நிறுவனமும் அதைத்தான் செய்யவுள்ளது. எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்த ஏற்பாடு டெஸ்லா போன்ற சர்வதேச வாகன உற்பத்தியாளர்கள் முதலீடுகளை செய்வதற்கு முன்பு இந்திய சந்தையை மதிப்பீடு செய்ய உதவும். இந்தியாவில் மின்சார கார் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டமான ஸ்கீம் டூ ப்ரொமோட் மேனுஃபாக்சரிங் ஆப் எலக்ட்ரிக் பேசஞ்சர் கார்ஸ் இன் இந்தியா (SMEC) என்ற திட்டத்தின் டெஸ்லா நிறுவனம் செயல்பட இருக்கிறது.

SMEC திட்டம் மார்ச் 2024-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இன்னும் 2 வாரங்களுக்குள் இந்த திட்டம் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் வெளியிடப்படலாம் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எலான் மஸ்க்கின் தலைமையின் கீழ், டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்வதற்கு விற்பனை இடத்தையும், ஊழியர்களையும் நியமித்து வருவதாக கூறப்படுகிறது.
SMEC திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப காலம் 120 நாட்கள். இந்த காலக்கெடு அதற்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். டெஸ்லா நிறுவனம் மட்டுமின்றி பிற உற்பத்தியாளர்களுக்கு முதலீடு செய்வதற்கு முன்பு இந்தியா சந்தையின் போக்கை தெரிந்து கொள்வதற்கு உதவும். கூடுதலாக ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் உலகளாவிய வாகன நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்பட உள்ளது. அடுத்த மாதம் SMEC திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும், அதன் பிறகு விண்ணப்பங்களை பெற அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
தமிழ்நாட்டில் கார் உற்பத்தி முதலீடுகளை அதிகரிப்பதற்காக 2024 ஆம் ஆண்டின் மார்ச் 15-ஆம் தேதி அன்று இந்தியா SMEC திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளூர் உற்பத்திக்காக குறைந்தபட்சம் $500 மில்லியன் முதலீடு செய்யும் நிறுவனங்கள் 5 ஆண்டுகளுக்கு 15 சதவீத இறக்குமதி வரியில் $35,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள மின்சார கார்களை இறக்குமதி செய்யலாம். சந்தையை ஆராய்ந்த பிறகு டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை நிறுவுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications