டெஸ்லா, டிவிட்டர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ-வாக இருக்கும் எலான் மஸ்க் பீர் தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் நிர்வாகம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்கள் மற்றும் விளம்பர நெட்வொர்க்-ஐ உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள வித விதமாக பல பொருட்களை விற்பனை செய்வது வழக்கம் அந்த வகையில் தற்போது டெஸ்லா நிறுவனம் அசத்தலான டிசைனில் பீர் பாட்டில்களை ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும், இணைய தளத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த வாரம், டெஸ்லா ஐரோப்பாவில் GigaBier ஐ அறிமுகப்படுத்தியது.
டெஸ்லா ஐரோப்பா
டெஸ்லா ஐரோப்பா GigaBier-ஐ இப்போது ஐரோப்பா முழுவதும் மக்களுக்கு விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது என்று டெஸ்லா ஐரோப்பா தனது டிவிட்டரில் அறிவித்தது. இந்த பீர் "சைபோர்க் ப்ரூவிங் செய்து, மனிதர்களால் தயாரிக்கப்பட்டது - கிகா பியர் இப்போது கிடைக்கிறது" என்று டெஸ்லா ஐரோப்பா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
டெஸ்லா கிகாபியர்
டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் படி, டெஸ்லா கிகாபியர் தனது சிறப்புமிக்க சைபர் டிரக் டிசைன் ஒத்து வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஜெர்மன் ரெய்ன்ஹீட்ஸ்ஜெபோட் பீர் மேக்கிங்கின் 500 ஆண்டு பாரம்பரியத்தை கௌரவிப்பதாகக் இந்த கிகாபியர் அறிமுகப்படுத்தப்படுவதாக டெஸ்லா தெரிவித்துள்ளது.
சைபர் டிரக் டிசைன்
டெஸ்லா சிட்ரஸ், பெர்கமோட் மற்றும் இனிப்புப் பழங்களின் கலவை தான் 'சைபர்ஹாப்ஸ்' என்று அழைக்கிறது. மேலும் இது பெர்லினில் தயாரிக்கப்பட்டு லிமிடெட் எடிஷன் பாட்டிலில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஐரோப்பிய வர்த்தகம்
டெஸ்லா பீர் இந்தியாவில் கிடைக்குமா என்றால் இல்லை. இந்த பீர் பிரத்தியேகமாக ஐரோப்பிய சந்தைக்காக டெஸ்லா உருவாக்கியுள்ளதால் ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரேட் பிரிட்டன், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள முகவரிகளில் டெலிவரி செய்யப்படுகிறது.
விலை
டெஸ்லா-வின் இந்த கிகாபியர் 3 பாட்டில் சேர்ந்து 89 யூரோவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய ரூபாய் படி 3 பீர் 7,975.48 ரூபாய் ரவுண்டா நீங்க 8000 ரூபாய்ன்னு எடுத்துக்கலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications