எலான் மஸ்க் அறிவிப்பால் டெஸ்லா பங்குகள் 34% சரிவு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா முதலீட்டாளர்கள் மத்தியில் டிவிட்டர் நிறுவனம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டிவிட்டர் நிறுவனத்தின் மீதான மோகத்தால் டெஸ்லா பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததில் இருந்து துவங்கியது டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி.

ஏற்கனவே எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், போரிங் கம்பெனி, நியூராலிங்க், சோலார் பேனல் வர்த்தகம் எனப் பல துறையில் பலவற்றில் பணியாற்றி வரும் நிலையில் டிவிட்டர் பெரும் சுமையாக இருக்கும்.

இதனால் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கும் என முதலீட்டாளர் நினைத்த காரணத்தால் ஏப்ரல் மாதம் டிவிட்டரை வாங்குவதாக அறிவித்த நாளில் இருந்து டெஸ்லா பங்குகள் தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் டிவிட்டர் நிறுவனத்தை மீண்டும் வாங்குவதாக அறிவித்துள்ள நிலையில் டெஸ்லா பங்குகள் மீண்டும் சரிய துவங்கியுள்ளது. 2வது முறையாக டிவிட்டரை வாங்குவதாக அறிவித்து 2 நாளில் டெஸ்லா பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் சரிந்துள்ளது.

டிவிட்டர்

டிவிட்டர்

ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் முறையாக எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதாக அறிவித்தார், அன்று முதல் இன்று வரையில் டெஸ்லா பங்குகள் 34 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இக்காலகட்டத்தில் அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் சரிவை எதிர்கொண்ட நிலையில் டெஸ்லா பங்குகள் கூடுதலாகச் சரிந்தது.

20 பில்லியன் டாலர்

20 பில்லியன் டாலர்

டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காகவும், வரிப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கவும் 51 வயதான எலான் மஸ்க் 219 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பெரும் பணக்காரராக உள்ளார். எலான் மஸ்க் கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர், 2022ல் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்தது மூலம் சுமார் 20 பில்லியன் டாலர் தொகையைத் திரட்டி பணமாக வைத்துள்ளார்.

டெஸ்லா முதலீட்டாளர்கள்

டெஸ்லா முதலீட்டாளர்கள்

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்வதும் டெஸ்லா முதலீட்டாளர்களுக்குப் பெரும் சுமையாகவும், பிரச்சனையாகவும் விளங்குகிறது. எலான் மஸ்க் ஆகஸ்ட் 9ஆம் தேதி தரவுகள் படி சுமார் 465 மில்லியன் டெஸ்லா பங்குகளை வைத்துள்ளார், இதன் மதிப்பு மட்டும் 110 பில்லியன் டாலர். இதை விட முக்கியமாக டெஸ்லா பங்குகள் 1:3 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா பங்குகள்

டெஸ்லா பங்குகள்

டெஸ்லா பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் 1.11 சதவீதம் சரிந்து 238.13 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. கடந்த 5 நாளில் 10.48 சதவீதமும், 6 மாதத்தில் 32.43 சதவீதமும், 2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் 40.46 சதவீதமும் சரிந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+