உலகின் மாபெரும் பணக்காரரான எலான் மஸ்க், அவரது எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா இன்க், கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய பங்கு உயர்வை அக்டோபர் 24 (நேற்று) கண்ட பிறகு, மஸ்க்-கின் மொத்த சொத்து மதிப்பு 33.5 பில்லியன் டாலர் ஒரே நாளில் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் 53 வயதாகும் எலான் மஸ்க்-ன் இப்போதை சொத்து மதிப்பு 270 பில்லியன் டாலராக உயர்ந்தள்ளது. இந்த அதிரடி உயர்வுக்கு முக்கியமான காரணம் டெஸ்லா பங்குகள் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 22% உயர்ந்தது தான்.

அமெரிக்க நேரத்தில் நேற்று காலை வர்த்தகம் துவங்கும் போது 240 டாலருக்கு துவங்கி 262.12 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. ஆனாலும் அதன் 52 வார உயர்வான 271 டாலரை இன்னும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி உயர்வுக்கு அடிப்படை காரணமாக இருந்தது டெஸ்லா காலாண்டு முடிவுகளும், அதன் பின்பு எலான் மஸ்க் பேசியதும் தான்.
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மூன்றாவது காலாண்டில், 2023ல் இருந்து அதிகபட்ச காலாண்டு லாபத்தைப் பதிவு செய்த காரணத்தாலும், எலான் மஸ்க் கொடுத்த வாக்குறுதி காரணமாகவும் பங்கு விலை பெரிய அளவில் உயர்ந்ததுள்ளது.
இந்த நிலையில் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் இப்போது அமேசான் தலைவரும் உலகின் இரண்டாவது பணக்காரரான ஜெஃப் பெசோஸை விட 61 பில்லியன் டாலர் அதிக சொத்து மதிப்புடன் மாஸ் காட்டி வருகிறார்.
எலான் மஸ்க் சொத்து மதிப்பில் பெரும்பகுதி, சுமார் 75% டெஸ்லா பங்குகள் பங்கு வகிக்கிறது. எலான் மஸ்க் டெஸ்லா மட்டும் அல்லாமல் ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), செயற்கை நுண்ணறிவு நிறுவனமான எக்ஸ்ஏஐ, போரிங் கம்பெனி, நியூராலிங்க் என பல நிறுவனங்களை சொந்தமாக வைத்துள்ளார்.
டெஸ்லாவின் வருவாய் அறிக்கையைத் தொடர்ந்து வெம்காஸ்ட் வழியாக பேசிய எலான் மஸ்க், டெஸ்லாவின் வாகன விற்பனையில் 30% வரை வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார், இதோடு சைபர்டிரக் முதல் முறையாக ஒரு காலாண்டில் லாபத்தைப் பெற்றதாகக் கூறினார்.
எலான் மஸ்க் டெஸ்லா 2026 இல் சைபர்கேப் எனப்படும் ரோபோடாக்சிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார், இறுதியில் ஆண்டுக்கு 2-4 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது தான் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
"எனது கணிப்பின்படி, நீண்ட கால அடிப்படையில் டெஸ்லா உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறும்" என்று எலான் மஸ்க் கூறியது தான் டெஸ்லா பங்குகளின் அதிரடி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
எலான் மஸ்க் தற்போது அமெரிக்க அரசியலில் முக்கிய ஆதிக்க சக்தியாக விளங்குகிறார். முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை எலான் மஸ்க் நேரடியாக ஆதரிப்பதை தாண்டி அவருடன் சென்று அரசியல் பிரச்சாரத்தி் பங்குபெற்று வருகிறார். மேலும் தேர்தல் முடியும் வரையில் சுமார் 70 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ஆப்பிரிக்காவில் பிறந்து, கனடா குடியுரிமை பெற்று அமெரிக்காவில் குடியேறினாலும் தற்போது அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் அரசியல் துறைகளில் முக்கிய நபராக உள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications