உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக விளங்கும் டெஸ்லா நிறுவனம் கடந்த சில வாரங்களாகத் தனது உச்ச விலையில் இருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு குறைவது மட்டும் அல்லாமல் டெஸ்லா முதலீட்டாளர்களும் அதிகளவிலான முதலீட்டை இழந்து வருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தில் மட்டும் டெஸ்லா நிறுவனப் பங்குகள் அதிரடியாக 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
டெஸ்லா-வின் போட்டி
அமெரிக்க நிறுவனமான டெஸ்லா-வுக்குப் போட்டியாகத் தற்போது உலகில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஆடம்பர எலக்ட்ரிக் கார்களைத் தயாரித்து வரும் காரணத்தால் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
எலான் மஸ்க் கருத்துக்கள்
இதுமட்டும் அல்லாமல் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் அவ்வப்போது டிவிட்டரில் தெரிவிக்கும் கருத்துக்கள், கிரிப்டோகரன்சி மீதான ஆதரவு ஆகியவை முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே முதலீட்டாளர்கள் டெஸ்லா பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்து வந்தனர்.
20 சதவீத வளர்ச்சி
இந்நிலையில் நேற்று சீன விற்பனையின் தரவுகள் முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான நம்பிக்கையை அளித்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் டெஸ்லா பங்குகள் சுமார் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
100 பில்லியன் டாலர்
இதனால் டெஸ்லா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது. இதேவேளையில் டெஸ்லா முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்-ஆக இந்நிறுவனத்தின் டார்கெட் விலை 578 டாலரில் இருந்து 900 டாலர் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
சீனா விற்பனை அளவு
சீனாவில் டெஸ்லா நிறுவனம் பிப்ரவரி ஒரு மாதத்தில் மட்டும் 18,318 கார்களை விற்பனை செய்துள்ளது. இது ஜனவரி அளவான 15,484 எண்ணிக்கையை விடவும் அதிகம் என்பது மட்டும் அல்லாமல் சமீபத்தில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட முஷ்டாங் எலக்ட்ரிக் கார் விற்பனை அளவை விடவும் 5 மடங்கு அதிகம்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

கேரளா சம்ருதி லாட்டரி முடிவு: ரூ.1 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்? பரிசுத் தொகையை பெறுவது எப்படி?



Click it and Unblock the Notifications