எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மும்பையில் தனது முதல் ஷோரூமைத் திறக்க 5 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உலகின் முதல் பணக்காரர் மற்றும் எக்ஸ் வலைதளத்தின் தலைவருமான எலான் மஸ்கின் பிரபல கார் தயாரிப்பான டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கவுள்ளது. அதன்படி, மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில், உலகின் முன்னணி மின்சார வாகன (EV) தயாரிப்பாளரான டெஸ்லா ஷோரூம் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனம், தற்போது இதற்கான குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஷோரூம் மும்பையின் வணிக மற்றும் சில்லறை விற்பனை மையமான பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள மேக்கர் மாக்சிட்டி கட்டடத்தில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில், டெஸ்லா இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மட்டுமே விற்பனை செய்யும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம், டெஸ்லா தனது LinkedIn பக்கத்தில் குறைந்தது 13 புதிய பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கான இருப்பிடம் மும்பை பெருநகரப் பகுதியில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த இடத்திற்கான குத்தகை ஒப்பந்தம் கடந்த பிப்.16 முதல் 5 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. 4,003 சதுர அடி (372 சதுர மீட்டர்) பரப்பளவிற்காக முதல் ஆண்டு வாடகையாக ரூ. 3,87,56,113 (USD 4,46,000) டெஸ்லா செலுத்தவுள்ளது. பதிவுசெய்யப்பட்ட குத்தகை ஆவணத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் வாடகை 5% அதிகரிக்கும், மேலும் ஐந்தாவது ஆண்டில் இது ரூ. 4,70,98,505 (USD 5,42,000) ஆக அதிகரிக்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை CRE Matrix எனும் அனாலிடிக்ஸ் நிறுவனம் ராய்ட்டர்ஸுக்கு வழங்கியுள்ளது. மேலும், மும்பையைத் தவிர, டெஸ்லா புது தில்லியிலும் ஒரு ஷோரூமைத் திறக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலமாக இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எலெக்ட்ரிக் வாகன சந்தையை இந்தியாவில் ஊக்குவிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகனங்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா நிறுவனங்களுக்கு டெஸ்லாவின் வருகை கடும் போட்டியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications