சர்வதேச அளவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் டெஸ்லா, இந்தியாவில் கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க விருப்பம் இல்லையென திட்டவட்டமாக கூறியது இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால் எலான் மஸ்க் இந்தியாவில் தனது கார்களை விற்கும் திட்டத்தை மட்டும் கைவிடவில்லை.
இந்தியாவில் முதல் டெஸ்லா ஷோரூம் ஜூலை மாதத்தில் மும்பை மற்றும் டெல்லியில் திறக்க உள்ள நிலையில் தற்போது முக்கியமான அப்டேட் வந்துள்ளது. இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையும் இல்லை, அசம்பிளி ஆலையும் இல்லை, இப்படியிருக்கையில் இறக்குமதி செய்து தான் விற்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த நிலையில் டெஸ்லா, சீனாவின் ஷாங்காய் தொழிற்சாலையில் இருந்து மாடல் ஒய் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்காக இறக்குமதி செய்துள்ளது. மும்பையில் ஐந்து வாகனங்கள் வந்துள்ளன, ஒவ்வொன்றும் 27.7 லட்சம் ரூபாய் ($31,988) மதிப்புடையவை. இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 70% இறக்குமதி வரி இருக்கும் காரணமாக, ஒவ்வொரு வாகனத்திற்கும் 21 லட்சம் ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் விற்கப்படும் மாடல் ஒய் கார்கள் வரி மற்றும் காப்பீட்டு-க்கு முன் சுமார் 47- 49 லட்சம் ரூபாயாக இருக்கப்போகிறது என தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் இந்த காரின் விலை 44,990 டாலர், அந்நாட்டு அரசு அளிக்கும் வரி தள்ளுபடிக்குப் பின் 37,490 டாலருக்கு விற்கப்படுகிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 33 லட்சம், இதுவே PPP முறையில் கணக்கிட்டால் இது வெறும் 7.5 லட்சம் ரூபாய் மட்டுமே.
இதேவேளையில் டெஸ்லா, இந்திய சந்தையில் இந்த மாடல் ஒய் கார்களை லாப மார்ஜின் மற்றும் பிராண்ட் நிலைப்பாட்டின் அடிப்படையில் இறுதி விலையை நிர்ணயம் செய்யும். இதனால் மாடல் ஒய் கார்களின் விலை 50 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா-வின் திட்டம் படி மும்பையில் ஜூலை மாதத்தின் மத்தியில் தனது முதல் இந்திய ஷோரூம்-ஐ திறக்க உள்ளது, பின்னர் டெல்லியில் அடுத்த ஷோரூம் திறக்கப்படும். சீனாவில் இருந்து மாடல் ஒய் கார்களை இறக்குமதி செய்த டெஸ்லா அமெரிக்கா, சீனா, மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சூப்பர்சார்ஜர் உபகரணங்கள், வாகன பாகங்கள், மற்றும் இதர பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications