எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் கூடிய விரைவில் தங்களுடைய எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் தங்களுடைய எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.
டெஸ்லா நிறுவனம் தங்களுடைய எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக இந்தியாவில் வாகன கொள்முதல், விற்பனை, விற்பனைக்கு பிந்தைய சேவை என பல்வேறு பணிகளுக்கும் ஆட்களை வேலைக்கு தேர்வு செய்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக நிபுணர்களை வேலைக்கு தேர்வு செய்வதாக விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் டெஸ்லா நிறுவனம் தங்களுடைய கார்களை இந்தியாவில் கூடிய விரைவில் விற்பனை செய்ய இருப்பதும் அதற்காக சார்ஜின் கட்டமைப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வர இருப்பதும் உறுதியாக இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் சார்ஜிங் நிலையங்களை கட்டமைக்க இருக்கிறது டெஸ்லா. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக தற்போது ஊழியர்களை டெஸ்லா நிறுவனம் தேர்வு செய்து வருகிறது.
மத்திய மாநில அரசுகளுடன் சார்ஜிங் நிலையங்களை கட்டமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்துவது , அதற்கான இடங்களை தேர்வு செய்வது, அதன் தொழில்நுட்பங்களை நிர்வகிப்பது என்பன உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்த நபர் மேற்கொள்வார் என டெஸ்லா நிறுவனம் லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு தொடர்பான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார்களை பயன்படுத்துபவர்களின் தேவைக்காக இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுவதாக அந்த வேலை வாய்ப்பு பதிவு குறிப்பிட்டுள்ளது. அதேபோல டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய கார்களை விற்பனை செய்வதற்காக Consumer Engagement மற்றும் Leads Generation Specialist ஆகிய பிரிவுகளுக்கும் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து வருவதாக தங்களுடைய லிங்குடின் பக்கத்தில் விளம்பரம் வெளியிட்டு இருக்கிறது.
இவர்கள் content creation, lead generation, retail marketing events உள்ளிட்ட நிகழ்வுகளை இவர்கள் மேலாண்மை செய்வார்கள் என கூறப்படுகிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனை பிரிவில் அதிக போட்டி இருப்பதால் மார்க்கெட்டிங் பிரிவில் டெஸ்லா தனி கவனம் செலுத்துகிறதாம். பல்வேறு இடங்களில் தங்களுடைய கார்களை அறிமுகம் செய்யக்கூடிய நிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கு டெஸ்லா நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறதாம்.
இது தவிர delivery advisors என்ற பதவிக்கும் ஆட்களை தேர்வு செய்து வருகிறது. டெல்லி மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் இந்த பிரிவில் வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுத்து வருவதாக டெஸ்லா நிறுவனம் கூறுகிறது. டெஸ்லா நிறுவன வாகனங்கள் வாடிக்கையாளர்களிடம் சரியான நேரத்தில் டெலிவரி செய்வது, தங்களுடைய வாகனங்கள் தொடர்பாக அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பயிற்சி அளிப்பது , தொழில்நுட்பங்களை எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட விழிப்புணர்வை இவர்கள் ஏற்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications