அமெரிக்காவில் பிரதமர் மோடி மற்றும் எலான் மஸ்க் சந்திப்பிற்கு பின்பு இந்தியாவில் டெஸ்லா கார்களின் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளது, சில நாட்களுக்கு முன்பு டெஸ்லா நிர்வாகம் இந்தியாவில் தனது உதிரிபாகங்களை தயாரிக்கும் திட்டத்தை முன்வைத்தது. இது மத்திய அரசால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட திட்டம் என்பதால் பெரிய அளவிலான முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாக குழு தனது கனவு ப்ராஜெக்ட் ஆக இருக்கும் பட்ஜெட் விலை எலக்ட்ரிக் கார் தயாரிப்பை இந்தியா மூலம் நினைவாக்க திட்டமிட்டு உள்ளது. 24000 டாலருக்கும் குறைவான விலை கொண்ட கார்-ஐ இந்தியாவில் தயாரிக்கும் முக்கியமான திட்டத்தை செயல்படுத்த தொழிற்சாலை அமைக்க டெஸ்லா உயர்மட்ட குழு இந்த மாத இறுதிக்குள் மத்திய வர்த்தக துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

டெஸ்லா இந்தியாவில் முதலீடு செய்யவும், இந்தியாவில் அதன் கார்களை விற்பனை செய்யவும் ஆர்வமாக தான் உள்ளது. ஆனால் டெஸ்லா-வின் காஸ்ட்லியான கார்களின் விற்பனைக்கு இந்தியாவில் போதுமான வரவேற்பு கிடைக்குமா என்பது பெரும் கேள்வி. இதனாலேயே அமெரிக்கா, சீனா தொடர்ந்து ஜெர்மனியில் தனது ஜிகாபேக்டரியை திறந்தது டெஸ்லா. உற்பத்தியை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க வேண்டுமெனில் இந்தியா தான் பெஸ்ட் சாய்ஸ்.
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனை தொடர்பாக கடந்த 2 வருடங்களாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் டெஸ்லா கார்களை தயாரிக்கும் திட்டத்தை தற்போது டெஸ்லா கையில் எடுத்துள்ளது. சீனாவில் தற்போது மாடல் 3 செடான் கார் விலை 32200 டாலர், இந்திய தொழிற்சாலை மூலம் 24000 டாலர் மதிப்பிலான கார்களை தயாரிக்கப்பட்டால் 25 சதவீத குறைவான விலையில் டெஸ்லா தனது கார்களை அறிமுகம் செய்யும்.

24000 அமெரிக்க டாலர் எனில் இன்றைய ரூபாய் மதிப்பில் 19.61 லட்சம் ரூபாய். மே மாதமே டெஸ்லா அதிகாரிகள் மத்திய அரசு அதிகாரிகளை இந்தியாவில் தனது வர்த்தகம் துவங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் இந்த மாதம் துவங்க உள்ளது. இந்த வாரத்திற்குள் டெஸ்லா அதிகாரிகள் மத்திய வர்த்தக துறை அமைச்சரான பியூஷ் கோயல்-ஐ சந்திக்க உள்ளனர்.

மே மாத கூட்டத்தில் டெஸ்லா இந்தியாவில் கார்களுக்கான உற்பத்தி தளம் மற்றும் பேட்டரிகளை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு உள்ளது என செய்திகள் வெளியான நிலையில், பியூஷ் கோயல் உடனான இந்த சந்திப்பில் EV சப்ளை செயின் மற்றும் நிலம் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என ரெயூட்டர்ஸ்-க்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications