உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்-கிற்கான சம்பளம் தொடர்பான வழக்கு கடந்த மாதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது டெஸ்லா 6,020 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இந்நிறுவனத்தில் மந்தமடைந்து வரும் விற்பனை மற்றும் லாபம் குறைவதை சமாளிக்கும் விதமாக 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் லாபம் 55 சதவீதம் சரிந்து வெறும் 1.13 பில்லியன் டாலரை மட்டுமே லாபமாக பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்நிறுவன முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் எலான் மஸ்க் பேன்ஸ், டெஸ்லா பேன்ஸ்-க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு அதே மார்ச் காலாண்டில் 2.51 பில்லியன் டாலரை லாபமாக டெஸ்லா பெற்று இருந்தது. இதேபோல் மார்ச் காலாண்டில் டெஸ்லா வருவாயில் 9 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது 2012க்கு பின்பு மோசமான சரிவை பதிவு செய்துள்ளது.
கடந்த வாரம், எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களிடையேயான போட்டி கடுமையாகி வருவதாலும், விற்பனை குறைவதாலும் உலகளவில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பணியாளர்களை பணி நீக்கம் செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது.
ஆனால் அப்போது இந்த பணிநீக்கத்தில் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படாத நிலையில், காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது 6020 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க தொழிலாளர் சட்டத்தின்படி, 100 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், தொழிற்சாலை மூடல் அல்லது பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு 60 நாட்கள் முன்னதாக அந்தந்த மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதன்படி, டெஸ்லா நிறுவனம் திங்கள் கிழமை டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியா மாநில அரசுக்கு பணிநீக்கம் குறித்த அறிக்கையை அனுப்பியுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, கலிபோர்னியாவில் 3,332 பணியாளர்களும், டெக்சாஸில் 2,688 பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். பணி நீக்கம் ஜூன் 14 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எலான் மஸ்க் தனது சமூக வலைத்தளமான X-ல் செவ்வாய்க்கிழமை பதிவிட்ட செய்தியில், "டெஸ்லா நிறுவனம் கலிபோர்னியாவில் இதுவரை 30,000-க்கும் அதிகமான உற்பத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது!" என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த பணிநீக்க நடவடிக்கையில் டெஸ்லா நிறுவனத்தில் உருவாக்கிய புதிய மார்க்கெட்டிங் அணியை மொத்தமாக எலான் மஸ்க் பணிநீக்கம் செய்துள்ளார். வெறும் 4 மாதத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த டீமில் அமெரிக்க குரோத் அணியில் மட்டும் 40 பேர் உள்ளனர்.
அமெரிக்க அணியை அலெக்ஸ் இன்கிராம், உலகளாவிய அணியை Jorge Milburn வழிநடத்தி வந்தனர். தற்போது இவரையும் சேர்த்து மொத்த குரேத் டீமும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல் முக்கியமான பணிநீக்கங்கள் டெஸ்லா டிசைன் ஸ்டூடியோ-வில் இருந்து நடந்துள்ளது. இதேபோல் டெஸ்லா நிர்வாகம் டிவி, ரேடியோ, பிரின்ட் போன்ற பாரம்பரியமான விளம்பர முறையில் செலவு செய்வதை குறைக்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications