உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா 2021ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே தனது பணிகளைத் துவங்க உள்ளதாக மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் MSME துறை அமைச்சரான நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெஸ்லா அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தனது கார் தயாரிப்புக்காகத் தொழிற்சாலையை அமைத்துள்ள நிலையில், இந்தியாவில் ஆராய்ச்சி கூடம் அமைக்கத் திட்டமிட்டு இருந்தது. இதோடு டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நேரடியாகக் கார்களை விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.
ஆட்டோமொபைல் தயாரிப்பு நாடு
இந்தியா அடுத்த 5 வருடத்தில் உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்புச் சந்தையாக மட்டும் அல்லாமல் உலகின் டாப் ஆட்டோமொபைல் தயாரிப்பு நாடாக உயரும் என நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியா ஆட்டோமொபைல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நித்தின் கட்கரி அறிவிப்பு
இந்தியாவில் எலக்ட்ரிக் கார் பயன்பாட்டுக்கும், தயாரிப்புக்கும் ஆதரவு அளிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டில் பல முன்னணி நிறுவனங்கள் மலிவான விலையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்தியாவில் பெரிய வர்த்தகச் சந்தை உருவாக வாய்ப்பு உள்ளதாக நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.
வர்த்தகத்தைக் கைப்பற்றும் முடிவு
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதற்கட்டமாக விற்பனைக்காக மட்டுமே வர உள்ளது. நாடு முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்த பின்பு எதிர்காலத்தில் தனது கார்களை இந்தியாவில் அசம்பிளி மற்றும் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளதாக நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் பதில்
அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு டெஸ்லா எப்போது வரும் என மக்கள் டிவிட்டரில் எலான் மஸ்க்-ஐ கேட்ட போது, எலான் கண்டிப்பாக அடுத்த வருடம் வருவோம் என டிவிட்டரில் பதில் அளித்திருந்தார்.
தற்போது மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் MSME துறை அமைச்சரான நித்தின் கட்கரி உறுதி அளித்துள்ளார்.
மாடல் 3 கார்
மேலும் இந்தியாவில் டெஸ்லா முதற்கட்டமாகத் தனது மலிவு விலை மாடலான காரான மாடல் 3 காரை அறிமுகம் செய்ய உள்ளதாகக் கருத்து நிலவுகிறது.
அமெரிக்காவில் மாடல் 3 காரின் விலை 39,000 டாலர், இந்திய ரூபாய் மதிப்பின் படி 29 லட்சம் ரூபாய். ஆனால் மத்திய அரசு டெஸ்லா காருக்கு வரிச் சலுகை அளிக்காத பட்சத்தில் இதன் விலை 35 லட்சம் ரூபாயை தாண்டும் வாயப்பு உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications