அமெரிக்கா: டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, தனது இரண்டாவது பெரிய சந்தையான சீனாவில் 10% அதிகமான பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளது. இதனை டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஒரு மெமோவில் அறிவித்துள்ளார். விற்பனை சரிவு மற்றும் மின்சார வாகன தயாரிப்பில் நிலவும் கடும் போட்டியின் காரணமாக இந்த பணி நீக்கம் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக வாகன உற்பத்தியில் மிகப்பெரிய சந்தையாக சீனா இருக்கிறது. இந்நிலையில் குறைந்த விற்பனை மற்றும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதே, இந்த பணி நீக்கத்திற்கு காரணம் என்று பல செய்தித் தரவுகள் கூறுகிறது. ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, எலான் மாஸ்க் திங்களன்று, ஒரு மெமோவில் டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரியும் 10% ஊழியர்களைக் குறைவான விற்பனையின் காரணமாக பணிநீக்கம் செய்வதாகக் கூறியுள்ளார்.

மேலும் சீனாவில் இருக்கும் டெஸ்லா நிறுவனத்தில் பணி புரியும் விற்பனை குழுவில் உள்ள சில நபர்களுக்கு பணி நீக்கம் குறித்த செய்திகள் அறிவிக்கப்பட்டதாகவும், மேலும் 10 சதவீதத்திற்கு அதிகமானோர் வேலை இழக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி சந்தையான சீனாவில், டெஸ்லா நிறுவனம் அதிகப் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. மேலும், புதிய மாடல் கார்களான BYD கார்களை வெளியிடுவதில் டெஸ்லா நிறுவனம், தனது போட்டியாளர்களுடன் கடுமையான விலை நிர்ணயிக்கும் போரில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது புதிய மாடல் வாகனங்களுக்கு எவ்வாறு விலை நிர்ணயிக்கப்படுகிறது, என்பதில் பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், வாகனங்களை வாங்க விரும்பும் மக்கள் எங்கு விலை குறைவாக உள்ளது என்பது பற்றி ஆராய்ந்து தான் முடிவெடுப்பார்கள். அதன்படி டெஸ்லா நிறுவனம் மற்றும் அதன் போட்டியாளர்கள் புதிய மாடல் வாகனங்களுக்கு விலை நிர்ணயிப்பது குறித்து சிக்கல்கள் எழுந்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் அதிக அளவு இல்லை புதிய மாடல் கார்கள் மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய உள்ளதால், இந்த பணி நீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று கார்ட்னர் மற்றும் ஹார்க்ரீவ்ஸ் லான்ஸ்டவுன் ஆய்வாளர்கள் திங்களன்று தெரிவித்தனர். மேலும், டெஸ்லா நிறுவனம் அதன் உலகளாவிய வாகன விற்பனை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக குறைந்துள்ளது என அறிவித்துள்ளது.
இந்நிலையில் தனது எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், இந்தியாவிற்கு வந்து மோடியை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. இதனை எலான் மஸ்க், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த சந்திப்பானது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. டெஸ்லா நிறுவனத்தின் மற்ற அதிகாரிகளும் வர இருக்கின்றனர். சமீபத்தில், டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவில் தொடங்க அவர்கள் இடம் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற செய்திகளும் வெளியானது. அதற்காக பல மாநிலங்களும் தங்கள் ஊர்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்து வருகின்றனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications