வெறும் 20 லட்சம் ரூபாயில் டெஸ்லா கார்.. இந்தியாவுக்காக எலான் மஸ்க் போட்ட பக்கா பிளான்..!!

ஆட்டோமொபைல் உலகில் பெரும் மாற்றத்தைச் செய்துள்ள டெஸ்லா நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே மலிவான விலையில் கார்களைத் தயாரித்து இந்தியா உட்பட ஆசியா நாடுகள், ஐரோப்பா, தென் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு வருகிறார் எலான் மஸ்க்.

பொதுவாக எலக்ட்ரிக் கார்கள் என்றாலே பெரும் தொகையைச் செலவாக ஈர்ப்பது பேட்டரி பேக் தான், இந்த நிலையில் மலிவான கார் என்றால் பேட்டரி பேக் தவிர மற்ற விஷயங்களில் செலவுகளைக் குறைக்க வேண்டும். இதுதான் மிகப்பெரிய சவால்.

வெறும் 20 லட்சம் ரூபாயில் டெஸ்லா கார்.. இந்தியாவுக்காக எலான் மஸ்க் போட்ட பக்கா பிளான்..!!

டெஸ்லா நிறுவனத்தில் தற்போது குறைவான விலை கொண்ட காரின் விலை 32000 டாலர், இந்தக் கார் இந்தியாவுக்கு இறக்குமதி செய்தால் 100 சதவீத வரி உடன் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விலையில் விற்பனைக்கு வரும். இது பெரிய அளவிலான சந்தை வர்த்தகத்தைப் பெற முடியாது என்பது தான் எலான் மஸ்க் இந்தியாவுக்கு டெஸ்லா-வை கொண்டு வராமல் இருக்க முக்கியக் காரணமாக உள்ளது.

இதை உடைக்கும் விதமாக மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தி உத்தரவாதத்துடன் 5 வருடத்திற்கு வரிச் சலுகை அளிக்கும் திட்டத்தை டெஸ்லா உடன் பேசி வரும் வேளையில், டெஸ்லா-வும் முக்கியமான திட்டத்தைத் தீட்டி வருகிறது. அனைத்து நாட்டு மக்களும், ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பட்ஜெட் விலையில் டெஸ்லா கார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்லா சுமார் 25000 யூரோ விலையில் இந்தியாவில் கிட்டதட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 கதவுகள் மட்டுமே கொண்ட ஒரு எலக்ட்ரிக் கார்களை ஜெர்மனி தொழிற்சாலையில் டிசைன் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பட்ஜெட் காரை ஜெர்மனியில் அறிமுகம் செய்த கையோடு இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது டெஸ்லா.

இந்த மலிவு விலை காருக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் ஜெர்மனி தொழிற்சாலையில் தயாரிக்கப்படு ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்த பின்னர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மலிவு விலை கார்களுக்கு ஐரோப்பியாவிலும் பெரும் வரவேற்பு இருக்கும் காரணத்தால் ஜெர்மனி தொழிற்சாலை மிகவும் முக்கியமானதாக மாற உள்ளது.

இதேவேளையில் சீன தொழிற்சாலையில் இந்த மலிவு விலை கார் தயாரிப்பு பணிகளைத் துவங்கினால் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது, இதற்கிடையில் மெக்சிகோ நாட்டில் புதிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தொழிற்சாலையைக் கட்ட எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார். இதுவும் பட்ஜெட் விலை கார்களின் தயாரிப்புக்காக ஒதுக்கப்படுமெனில் ஒட்டுமொத்த கார் விற்பனை சந்தையை டெஸ்லா சாப்பிட உள்ளது.

வெறும் 20 லட்சம் ரூபாயில் டெஸ்லா கார்.. இந்தியாவுக்காக எலான் மஸ்க் போட்ட பக்கா பிளான்..!!

20 லட்சம் ரூபாய் மதிப்புடைய டெஸ்லா கார்களின் பிறப்பிடமாக ஜெர்மனி ஜிகாபேக்டரி இருக்கப் போகிறது, இதன் மூலம் ஜெர்மனி நாட்டில் இருந்து CKD முறையில் கார்களின் பாகங்கள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு அதை உள்நாட்டில் அசம்பிள் செய்யப்படத் தற்போது திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. CKD என்பது Completely Knocked Down.

டெஸ்லா மட்டும் 20 லட்சம் ரூபாயில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டால் டாடா முதல் டோயோட்டா வரையில் பெரும் வர்த்தக இழப்பை எதிர்கொள்ளும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+