நியூயார்க்: எலான் மஸ்க் இந்தியா வருவதற்கு முன்பே, டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி தளமாக தமிழ்நாட்டை மாற்ற, தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.
சில நாட்களாக GCC கள் தொடர்ந்து, இந்தியாவிற்கு படையெடுத்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதற்காக டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், இந்த மாதத்தின் இறுதியில் இந்தியா வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் அதற்காக பிரதமர் மோடியை இந்த மாத இறுதியில் சந்திக்க உள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இதனை தெரிவித்து இருந்தார்.

இதற்காக, சுமார் $2 பில்லியன் மதிப்பிலான முதலீட்டில், EVகளை உற்பத்தி செய்வதற்காக, இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை உருவாக்க டெஸ்லா நிறுவனம் தேடி வருகிறது. எனவே, டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி தளமாக தமிழ்நாட்டை மாற்ற, தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய, தமிழகத்தின் தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, அனைத்து உலகளாவிய கார் நிறுவனங்களிடமிருந்தும் மின்சார வாகன உற்பத்திக்கான அனைத்து வாய்ப்புகளையும் மாநிலம் வழங்கும், என்று தெரிவித்துள்ளார். தமிழகம் சிறந்த மின்சார வாகனக் கொள்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. தமிழ்நாடு ஏற்கனவே, நாட்டின் வாகனத் தலைநகராக உள்ளது, இப்போது மாநிலத்தை EV தலைநகராகவும் மாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளோம், என்று கூறியுள்ளார்.
அமைச்சரின் அறிக்கை, எலான் மஸ்க், இந்தியாவிற்கு வருகை தரும் முன்னரே வந்துள்ளது. இந்த சந்திப்பானது இந்தியாவுக்கும், டெஸ்லாவுக்கும் முக்கியமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
டெஸ்லா இந்தியாவிற்கு வந்தால், அது பல வாடிக்கையாளர்களை சென்றடையக்கூடும், ஏனெனில் மின்சார கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மேலும், தெற்காசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னையில், ஏற்கனவே நிசான் மோட்டார் கோ, ரெனால்ட் எஸ்ஏ, ஹூண்டாய் மோட்டார் மற்றும் பிஎம்டபிள்யூ ஏஜி போன்ற கார் நிறுவனங்கள் உள்ளன. இந்த வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களும் சென்னையில் உள்ளன.
டெஸ்லாவின் கவனத்தை ஈர்க்க சென்னைக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் டெஸ்லா நிறுவனம் தங்களின் மாநிலங்களுக்கு வர வேண்டும் என்று விரும்புவதால் கடும் போட்டி நிலவுகிறது. இந்தியாவில் EV உற்பத்தி ஆலையை நிறுவ டெஸ்லா பரிசீலித்து வருகிறது.
அதிக இறக்குமதி வரிகள் காரணமாக டெஸ்லா இந்தியாவிற்குள் நுழைவதற்கான தனது திட்டத்தை முன்னதாகவே நிறுத்தி வைத்திருந்தாலும், புதிய EV கொள்கை - EV களில் குறைந்த இறக்குமதி வரிகளுடன், நாட்டிற்குள் சுமூகமாக நுழைவதற்கு வழி வகுத்துள்ளது.
புதிய EV கொள்கையின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ. 4,150 கோடியை நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் மற்றும் மூன்று ஆண்டுகளுக்குள் உள்ளூர் ஆலையில் இருந்து EV களை உற்பத்தி செய்யத் தொடங்க வேண்டும். தற்போது இறக்குமதி வரி தடை நீங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியாவிற்கான டெஸ்லாவின் திட்டங்கள் குறித்து எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் வாய்ப்புகள் உள்ளன.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications