நியூயார்க்: சமீபகாலமாக EV, நிறுவனங்களின், முதலீடு இந்தியாவில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் டெஸ்லா நிறுவனமும் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், இந்த மாதத்தின் இறுதியில் இந்தியா வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதியில் எலான் மாஸ்க் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இதனை தெரிவித்து இருந்தார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் "இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!" என்று எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
இந்த சந்திப்பானது டெஸ்லா நிறுவனம் இந்தியாவில், எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி குறித்து முதலீடு செய்வது தொடர்பாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ராய்ட்டர்ஸ் இன் ரிப்போர்ட்படி, ஏப்ரல் 22ஆம் தேதி எலான் மஸ்க், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராய்ட்டர்ஸ் எலான் மஸ்கின் இந்த இந்திய பயணம் கடைசி நேரத்தில் மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு என கூறியுள்ளது.
எலான் மாஸ்க் மட்டுமன்றி டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகளும் இந்த மாதம் இந்தியாவை பார்வையிட உள்ளனர். சுமார் இரண்டு மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் நிறுவனத்திற்கான, ஆலைகளை அமைக்கும் இடங்களை பற்றி ஆராய்வதற்காக டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள் இந்தியா வர உள்ளனர்.
இந்த வாரத் தொடக்கத்தில் எலான் மாஸ்க், நோர்ஜஸ் பேங்க் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் இன் CEO, நிக்கோலாய் டாங்கன் உடனான சந்திப்பில் "இந்தியா இப்போது உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. மற்ற எல்லா நாடுகளிலும் எலெக்ட்ரிக் கார்கள் இருப்பது போல் இந்தியாவிலும் எலெக்ட்ரிக் கார்கள் இருக்க வேண்டும். இந்தியாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யத் தொடங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும்" என இந்தியாவில் மின்சார வாகனங்களை வழங்குவது குறித்த தனது கருத்துக்களை மஸ்க் வெளிப்படுத்தினார்.
இதற்கிடையில், தி ஹிந்து பிசினஸ் லைனின் அறிக்கைக்கிபடி, டெஸ்லா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் மின்சார வாகனங்களுக்கான உற்பத்திப் பிரிவை நிறுவுவதற்கான சாத்தியமான கூட்டு முயற்சிக்காக விவாதித்து வருவதாகக் கூறியுள்ளது. இது வாகனத் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன் நுழைவைக் குறிக்கிறது.
ANI இன் அறிக்கைகளின்படி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் மின்சார வாகன (EV) உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக டெஸ்லா நிறுவனத்திற்கு சில நில விருப்பங்களை முன்மொழிந்துள்ளதாக ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கூடுதலாக, EV உற்பத்தி ஆலைகளை அமைக்க, இதேபோன்று, தெலுங்கானா அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அரசாங்கம் EV களுக்கு குறைந்த இறக்குமதி வரிகளை வழங்கும் புதிய EV கொள்கையை அறிவித்தது. இதனால் டெஸ்லா போன்ற வாகன உற்பத்தியாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு வசதியாக இருந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications