கனடாவில் டெஸ்லா அதிரடி.. 3 நாளில் 8600 வாகனங்கள் விற்பனை.. சர்ச்சையில் சிக்கிய டெஸ்லா..!!

மின்சார வாகனத் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள டெஸ்லா, சமீபத்தில் கனடாவில் அதிவேகமாக விற்பனையை மேற்கொண்டது. மூன்று நாட்களில் 8,600 க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்து, ரூபாய் 375 கோடி மதிப்புடைய மானியங்களைப் பெற்றது என்பது விசாரணையைத் தூண்டியுள்ளது.

மின்சார வாகன மானிய திட்டத்தின் இடைநிறுத்தத்துக்கு முன் நடைபெற்ற அதிவேக விற்பனை, அரசாங்கத்தினால் தற்போது ஆய்வு செய்யப்படுகின்றது. டெஸ்லா இந்த திட்டத்தை முறைகேடாக பயன்படுத்தியதா? அல்லது உண்மையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையானதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் தீவிரமாகச் செயல்படுகின்றனர்.

கனடாவில் டெஸ்லா அதிரடி.. 3 நாளில் 8600 வாகனங்கள் விற்பனை.. சர்ச்சையில் சிக்கிய டெஸ்லா..!!

கனடாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், கூட்டாட்சி மின்சார வாகன தள்ளுபடி திட்டம் (Federal Electric Vehicle Incentive Program) செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான வாகனங்கள் வாங்கப்படும் போது $5,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. இதன் மூலம், மின்சார வாகனங்களைப் பொதுமக்கள் விருப்பமுடன் வாங்கலாம் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இத்திட்டம் தொடங்கியபோது, 500,000க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் இந்த மானியத்துடன் விற்பனையானது. ஆனால் இந்தத் திட்டத்தை அரசு ஜனவரி 13, 2024 அன்று இடைநிறுத்தியது. இதற்கான காரணமாக, டெஸ்லா உள்ளிட்ட சில நிறுவனங்கள் இதை முறைகேடாகப் பயன்படுத்தியதா? என்பதற்கான சந்தேகம் முக்கியமானதாக இருக்கிறது.

முறையான விற்பனை நிலையை விட, டெஸ்லா மூன்று நாட்களில் 8,600 வாகனங்களை விற்றது என்பது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக, ஜனவரி 11, 2024 அன்று, டொராண்டோவில் உள்ள ஒரு மட்டும் நிலையத்தில் 1,200 வாகனங்கள் விற்பனையானது. இதன் மூலம், டெஸ்லாவிற்கு ஒரே நாளில் $4 மில்லியன் (ரூபாய் 35 கோடி) மானியங்கள் கிடைத்தன.

தொழில்துறை ஆய்வாளர்களும், இந்த விற்பனை உண்மையானதா? அல்லது வாகனப் பதிவு முறையில் ஏதாவது ஏமாற்றங்கள் உள்ளதா? என்பதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். கனடிய ஆட்டோமொபைல் டீலர்கள் அசோசியேஷன் (CADA), டெஸ்லா இந்த மானிய முறையை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, கனடாவின் போக்குவரத்து அமைச்சகத்திடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளது. இதன் மூலம், டெஸ்லா மானிய திட்டம் நிறைவடையப் போவதை முன்கூட்டியே அறிந்ததா?, முறையான விற்பனையாக இதை கணக்கில் கொள்ளலாமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

முக்கியமான விசயம் என்னவென்றால், உலகளவில் டெஸ்லா விற்பனை சிறப்பாக இல்லாத நிலையில், கனடாவில் மட்டும் இது அதிகரித்தது. உதாரணமாக, ஜெர்மனியில் 76% சரிவு, நெதர்லாந்தில் 24% சரிவு, ஸ்வீடனில் 42% சரிவு, நார்வே, டென்மார்க் - 48%, பிரான்ஸ் - 45%, இத்தாலி - 55%, ஸ்பெயின் - 10%, போர்ச்சுகல் - 53% ஆகிய நாடுகளில் டெஸ்லா விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 66% விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட டெஸ்லா வாகனங்களின் விற்பனை 49% குறைந்துள்ளது.

இந்த உலகளாவிய சரிவையும், கனடாவில் மட்டும் ஏற்பட்ட அதிவேக வளர்ச்சியையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, அதிகாரிகள் சந்தேகிக்கக் காரணமாகியுள்ளது. இப்போது கனடா அரசு மற்றும் மானியத் திட்ட அதிகாரிகள், டெஸ்லா விற்பனை தரவுகளை அலசுகின்றனர். டெஸ்லா வாகனப் பதிவு முறையாக நடந்ததா? மானியத் திட்டம் முடிவடையும் முன்னரே டெஸ்லா இதைத் தவறாகப் பயன்படுத்தியதா? டெஸ்லா விற்பனை தரவுகளில் ஏதாவது முறைகேடுகள் உள்ளனவா? இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்க, டெஸ்லா மற்றும் கனடா அரசு அதிகாரிகள் மோதும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விரிவான ஆய்வுக்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் முடிவுகள், கனடா அரசு டெஸ்லா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. மானிய கண்டறியப்பட்டால், டெஸ்லா பெரிய அளவில் அபராதம் செலுத்த வேண்டி இருக்கலாம். வருங்கால மானியத் திட்டங்களில், டெஸ்லா மீது கண்காணிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. போக்குவரத்து துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள், வாகன விற்பனை முறையை வலுவாக்க பரிந்துரை செய்யலாம்.

இப்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள், இதன் முடிவில் டெஸ்லா மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் மின்சார வாகனத் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம், மேலும் உலகளாவிய மானிய முறைகளிலும் சில மாற்றங்கள் கொண்டு வரக்கூடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+