மதுரை-க்கு வந்த அமெரிக்க டெக் நிறுவனம்.. பிரம்மாண்ட அலுவலகம்.. 3500 பேருக்கு ஜாக்பாட்..!

மதுரை-யில் தற்போது பல ஐடி நிறுவனங்கள் அடுத்தடுத்து அலுவலகத்தை அமைத்து வருகிறது.

மதுரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் வடபழஞ்சி ஐடி பார்க்-ல் பல உள்நாட்டு ஐடி நிறுவனங்கள் அலுவலகத்தை அமைத்து வரும் நிலையில், தற்போது அமெரிக்க டெக் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து புதிய கேம்பஸ்-ஐ அமைத்து வருகிறது.

இது மதுரை மட்டும் அல்லாமல் தென் மாவட்டங்களில் இருக்கும் பட்டதாரிகள் அனைவருக்கும் ஜாக்பாட் ஆக இருக்கப் போகிறது.

மதுரையில் pinnacle infotech

மதுரையில் pinnacle infotech

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் pinnacle infotech என்னும் நிறுவனம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காகத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

சென்னை, கோவை

சென்னை, கோவை

இதன் அடிப்படையில் pinnacle infotech நிறுவனம் சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களை விடுத்து வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மதுரையில் சுமார் 287 கோடி ரூபாய் முதலீடு செய்து புதிய மற்றும் பிரம்மாண்ட ஐடி கேம்பஸ்-ஐ கட்டி வருகிறது.

287 கோடி ரூபாய் முதலீடு

287 கோடி ரூபாய் முதலீடு

pinnacle infotech நிறுவனத்தின் கட்டுமான பணிகளும், அது குறித்த புகைப்படமும் தற்போது வெளியாகி இணையத்தை அசத்தி வருகிறது. 287 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் சுமார் 3500 பேருக்கு வேலைவாய்ப்புகளை இந்நிறுவனம் அளிக்க உள்ளது.

புதிய அலுவலகம்

புதிய அலுவலகம்

pinnacle infotech நிறுவனத்தின் புதிய அலுவலகம் மதுரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் வடபழஞ்சி ஐடி பார்க்-ல் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இப்புதிய அலுவலகத்தில் ஊழியர்களைப் பணியில் அமர்த்த இந்நிறுவனம் ஊழியர்களைத் தேர்வு செய்தும் பணிகளையும் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேவை மற்றும் வர்த்தகம்

சேவை மற்றும் வர்த்தகம்

Pinnacle Infotech Solutions ஆனது கட்டிடக்கலை, பொறியியல் மற்றும் கட்டுமான (AEC) நிறுவனங்களுக்குக் கட்டிட தகவல் மாடலிங் (BIM) தீர்வுகளை உலகளவில் வழங்குகிறது. திட்ட ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, சொத்து மேலாண்மை, இடர் குறைப்பு, தளவாட திட்டமிடல் மற்றும் செலவு மேம்படுத்தல் ஆகியவற்றை எளிதாக்குவதற்கு BIM சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்கா டூ மதுரை

அமெரிக்கா டூ மதுரை

Pinnacle Infotech நிறுவனம் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் இந்தியாவில்ல துர்காபூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர், மதுரை ஆகிய இடத்தில் அலுவலகத்தை வைத்து சுமார் 40 நாடுகளில் வர்த்தகம் செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+