அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றவுடன் முறைகேடாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணம் இவ்வாறு முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை பிடித்து வைப்பதற்கு என்றே குறிப்பிட்ட அளவு நிலத்தை வழங்க முன் வந்துள்ளது. அமெரிக்கா மெக்சிகோ எல்லை பகுதியில் இது அமைந்துள்ளது.
இது தொடர்பாக டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த குடியரசு கட்சி பிரதிநிதியும் நில ஆணையருமான டான் பக்கிங்காம், டொனால்ட் டிரம்புக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அமெரிக்காவில் முறைகேடாக நுழைந்தவர்களை பிடித்து நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள டான் பக்கிங்காம் முறைகேடாக ஏராளமானவர்கள் அமெரிக்காவினுள் நுழைவதால் பெருமளவில் டெக்சாஸ் மாகாணமும் பாதிக்கப்படுகிறது எனவே டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிலத்தை ஒப்படைக்க இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த பகுதியை கடந்த மாதம் தான் டெக்சாஸ் மாகாண அரசு விலை கொடுத்து வாங்கியுள்ளது. இங்கே சாலை வசதிகள் பெருமளவில் இல்லை, ஒரே ஒரு பொது மருத்துவமனை மட்டும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை அடைத்து வைத்து சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு பொருத்தமான இடமாக இருக்கும் என பக்கிங்காம் கூறியுள்ளார். அதாவது இந்த இடம் பிரதான விமான நிலையங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளது என்பதால் வெளிநாட்டவர்களை அவர்களின் ஊர்களுக்கு அனுப்பி வைக்க இது வசதியாக இருக்கும் என்கிறார்.
இதற்காக டிரம்ப் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு டெக்சாஸ் மாகாண அரசு தயாராக இருக்கிறது என கூறியுள்ளார். தற்போது அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கக்கூடிய டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். அவர் பதவியேற்ற உடனே குடியேற்ற கொள்கையில் பெரிய மாற்றங்களை அறிவிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது.
இதற்கு சில மாகாண அரசுகள் ஆதரவும் சில மாகாண அரசுகள் எதிர்ப்பும் தெரிவிக்கலாம். ஆனால் டெக்சாஸ் மாகாணத்தை பொருத்தவரை ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் எல்லை வழியாக வெளிநாட்டவர்கள் அமெரிக்காவினுள் நுழைவதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இவ்வாறு எல்லை தாண்டி வருபவர்களை அங்கேயே கைது செய்து சிறையில் அடைப்பது, உடனடியாக அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்புவது, எல்லை பகுதியில் தடுப்புச் சுவர்களை அமைப்பது என்பன உள்ளிட்ட பணிகளை டெக்சாஸ் மாகாண அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் அங்கே முறைகேடாக வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
இந்த நிலையில் தான் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் 1400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை இந்த அரசு வழங்க முன் வந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது 11 மில்லியன் பேர் முறைகேடாக நுழைந்து வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications