இந்தியாவின் டெக்ஸ்டைல் நகரமாக விளக்கும் திருப்பூர், நாட்டின் மொத்த ஆடை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த நிதியாண்டில் திருப்பூர் டெக்ஸ்டைல் துறை எதிர்கொண்ட வீழ்ச்சியில் இருந்து அதிரடியாக மீண்டு, நடப்பு நிதியாண்டில் (2024-25) சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மீண்டும் சர்வதேச சந்தையில் தனது ஆதிக்கத்தைப் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான தொடர்ச்சியாக பத்து மாதங்கள் திருப்பூரில் இருந்து ஆடை ஏற்றுமதி குறைந்ததால், திருப்பூரின் மொத்த ஏற்றுமதியில் 11% வீழ்ச்சி ஏற்பட்டது. இந்த சரிவால் பல சிறு நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது.

ஆனால் தற்போது நிலை மாறியுள்ளது, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் திருப்பூர் ஆடை ஏற்றுமதி 13% அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் 22% அதிகரிப்புடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டு அசத்தியுள்ளது. திடீரென ஆடை ஏற்றுமதி அதிகரிக்க முக்கியமான சில காரணங்கள் உள்ளது.
பங்களாதேஷ் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், மக்கள் போராட்டம் திருப்பூர்-க்கு ஜாக்பாட் ஆக மாறியது என்றால் மிகையில்லை. பங்களாதேஷ் நாட்டில் வர்த்தகம் செய்து வந்ச உலகளாவிய ஆடை உற்பத்தியாளர்களைத் திருப்பூர் நோக்கி திரும்ப வைத்துள்ளது.
இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் மட்டும் பிரிமார்க், டெஸ்கோ, டாமி ஹில்ஃபிகர், மார்க்ஸ் & ஸ்பென்சர், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி குளோபல் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் உள்ளிட்ட முன்னணி உலகளாவிய பிராண்டுகளும், அமெரிக்காவின் கேப், கார்ட்டர்ஸ், வால்மார்ட் மற்றும் ஐரோப்பாவின் நெக்ஸ்ட், டன்ஸ், ஆஸ்திரேலியாவின் டார்கெட், வூல்வொர்த்ஸ் போன்ற பிராண்டுகளும் திருப்பூர் நிறுவனத்தில் ஆர்டர்களை குவித்தது.
இதேவேளையில் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம், திருப்பூர் டெக்ஸ்டைஸ் துறையில் இருக்கும் முன்னணி தொழிற்சாலைகள் பசுமை திருப்பூர் (Green Tiruppur) என்ற புதிய முயற்சியை மேற்கொண்டனர். இதன் மூலம், பசுமை மின்சாரத்தைப் பயன்படுத்துதல் , நீர் சேமிப்பு மற்றும் கழிவு குறைப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்துள்ளது. இதன் விளைவாக, பசுமைப் புரட்சியை அதிகம் நம்பும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் திருப்பூர் நிறுவனங்களை ஆதிகம் நாடி வந்தது.
பசுமை திருப்பூர் (Green Tiruppur) முயற்சிகள் வாயிலாக 20 லட்சம் மரங்கள் நடப்பட்டு உள்ளது, காற்றால், சோலார் மூலம் சுமார் 1900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது, ஆனால் திருப்பூர் டெக்ஸ்டைல் துறைக்கு தேவையானது 300 மெகாவாட் மட்டுமே, கிட்டத்தட்ட 5 மடங்கு அதிக மின்சாரத்தை கிளீன் எனர்ஜி மூலம் தயாரிக்கப்படுவதாக திருப்பூர் எக்ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் அமைப்பின் தலைவர் கே.எம்.சும்பிரமணியன் தெரிவித்தார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications