பெண்களே பட்ஜெட்டில் இந்த அறிவிப்ப கவனிச்சீங்களா? ’தாய் கேர்’ திட்டத்தில் என்னென்ன கிடைக்கும்?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு 2026-27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில் பெண்களை மையப்படுத்தி பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

விஜய் தலைமையிலான தவெக அரசு அமைவதற்கு முக்கிய காரணமே பெண்களின் வாக்குகள் தான். அந்த வகையில் பெண்களுக்கு என பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு திட்டம் தாய் கேர் திட்டம். அது என்ன தாய் கேர் ? இதில் பெண்களுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

பெண்களே பட்ஜெட்டில் இந்த அறிவிப்ப கவனிச்சீங்களா? ’தாய் கேர்’ திட்டத்தில் என்னென்ன கிடைக்கும்?

கர்ப்பிணிகளின் நலன் மற்றும் கருவின் நலனை அடிப்படையாக கொண்டு தான் நிதி அமைச்சர் வில்சன் தாய் கேர் திட்ட அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார். குழந்தை பிறப்பின் போது தாய்க்கும் சேய்க்கும் எந்த ஒரு சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது, நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவு கர்ப்பிணிகளுக்கு கிடைப்பது தரமான மருத்துவ வசதி உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

Also Read

தற்போது ஒரு பெண் கருவுற்றால் உடனடியாக அருகில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்த உடன் மாதம் தோறும் அவரது உடல்நிலையும் கருவின் ஆரோக்கியமும் பரிசோதனை செய்யப்பட்டு சத்து மாவு உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தான் தாய் கேர் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மகப்பேறு நாள் நெருங்கும் போது கர்ப்பிணி பெண்கள் தங்கி இருந்து பயன்பெறும் வகையில் 23 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தாய் கேர் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

Recommended For You

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ தேதி நெருங்கும் காலகட்டத்தில், அவர்கள் பாதுகாப்பாக தங்கி முறையான மருத்துவ கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பெறும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கர்ப்பிணிகள் தங்கும் வகையில் மையங்கள் அமைக்கப்படும்.

கிராமப்புறங்கள் அல்லது தொலைதூர பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ தேதி நெருங்கும் போது மருத்துவமனைக்குச் செல்வதில் சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக, மருத்துவமனைகளின் அருகிலேயே தங்குவதற்கான வசதிகள் மற்றும் மருத்துவ பராமரிப்பு இதில் ஏற்படுத்தி தரப்படும்.

இங்கே தங்கும் கர்ப்பிணிகளுக்கு உணவு , மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவ கண்காணிப்பு ஆகியவை இலவசமாக கிடைக்கும். ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் பிறக்கும், குழந்தைகளுக்காக தாய்மாமன் சீர் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி அரசு மருத்துவமனையில் பிறக்கும், குழந்தைகளுக்கு தாய்மாமன் சீராக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

அப்போதே தங்க மோதிரத்திற்கு பதிலாக தாய் சேய் நலனை உறுதிப்படுத்தும் வகையில் கட்டமைப்புகளையும் வசதிகளையும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அதன் ஒரு பகுதியாகவே இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+