கேசினோ சூதாட்ட விடுதிகளை சட்டப்பூர்வமாக அறிவிக்க தாய்லாந்து முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டை பெரிய சுற்றுலா தளமாக மாற்றி கோடிக்கணக்கில் அந்நிய முதலீட்டை கவர்வதற்கும் வரிகளைக் குவிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. வேலைவாய்ப்பை பெருக்கி, வருமானத்தை உயர்த்தி நாட்டில் நிலவும் சட்டவிரோத சூதாட்ட துறையை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கேசினோக்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான விதிகளில் 30 ஆண்டுகளுக்கு முதலில் கேசினோக்களுக்கு லைசென்ஸ் தந்துவிட்டு பின்னர் 10 ஆண்டுகள் நீட்டிப்பு தருவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மக்கள் கருத்துகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை சேகரிக்கப்படுகிறது.

ஹோட்டல்கள், கன்வென்ஷன் சென்டர்கள், அம்யூஸ்மென்ட் பார்க்குகள் போன்றவற்றில் கேசினோக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில் தாய்லாந்து, உலக கேசினோ துறையில் பெரும் பகுதியை வகிக்கும் ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானுடன் சேர உள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச கேசினோ சூதாட்டம் மூலம் 263 பில்லியன் டாலர் வருமானம் வந்துள்ளது.
கேலக்ஸி என்டர்டெயின்மென்ட் குரூப் லிமிடெட், எம்ஜிஎம் ரிசார்ட்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் தாய்லாந்தில் கேசினோக்களை திறக்க ஆர்வம் காட்டியுள்ளன. மக்காவ், லாஸ் வேகாஸ் சாண்ட் கார்ப் ஆகியவையும் ஆர்வமாக உள்ளன. வாய்ப்பு கிடைத்தால் தாய்லாந்தில் கேசினோ திறக்கத் தயார் என்று லாஸ் வேகாஸ் கார்ப் கடந்த மாதம் கூறியது.
2024 முதல் ஆறு மாதங்களில் 17.5 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்கு வந்ததாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 35 சதவீதம் அதிகமாகும்.சுற்றுலாப் பயணிகளின் வரத்து 22.42 பில்லியன் டாலர் வருமானத்தை தந்துள்ளது.
சீனா, மலேஷியா, இந்தியர்கள் தான் பெருமளவில் வருகின்றனர். அத்துடன் தாய்லாந்து விசா இல்லா திட்டங்களையும் சுற்றுலா பயணிகளுக்கு தந்துள்ளது. இந்தியா, தைவான் நாட்டினருக்கு வரும் நவம்பர் 11 ஆம் தேதி வரை விசா தேவையில்லை.
தாய்லாந்தில் தற்போது கேசினோக்கள் சட்டவிரோதமாகும். அரசு நடத்தும் குதிரை பந்தயங்கள், லாட்டரிகளில்தான் சூதாட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டவிரோதமாக சாக்கர் பெட்டிங், மறைமுகமாக கேசினோக்கள், சட்டவிரோத லாட்டரிகள் நிறைய நடக்கின்றன.
கேசினோ மார்க்கெட் தாய்லாந்தில் ஏகப்பட்ட சுற்றுலா பயணிகளை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது உலகின் மிகப் பெரிய சூதாட்ட கேந்திரமான மக்காவுக்கு கடும் போட்டியைத் தரும். சீனாவில் இங்கு மட்டும்தான் சூதாட்டம் சட்டப்பூர்வமாக உள்ளது. முன்னதாக தாய்லாந்தில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்குவது குறித்த ஆலோசனையின்போது பௌத்த நாடான தாய்லாந்தில் பழமைவாத தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இருப்பினும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, சிங்கப்பூர், மியான்மர், பிலிப்பைன்ஸ் ஆகியவை ஏற்கெனவே சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக ஆக்கியுள்ளன. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஓராண்டுக்கள் பிரதமர் ஸ்ரேத்தார தாவிசின் தாய்லாந்தில் அந்நிய முதலீட்டைக் குவிப்பதற்கான முயற்சிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகிறார். அவர் கேசினோக்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஆதரவாக இருக்கிறார்.
Story Written by: jayachandran
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications