இந்தியர்களின் விருப்பமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து திகழ்கிறது. இந்நிலையில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை வரவழைப்பதற்காக தாய்லாந்து அரசு இந்தியர்களுக்காகவே பிரத்தியேக விசா சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி இந்திய பயணிகள் தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தங்கியிருக்கலாம். இதை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கலாம்.
தாய்லாந்து பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஏரின் பான்ரிட் வெளியிட்ட அறிவிப்பில், "முன்பிருந்த 30 நாட்கள் விசா-ஆன்-அரைவல் முறை மாறி, இந்தியர்கள் 93 நாடுகளை உள்ளடக்கிய தாய்லாந்தின் 'பார்ம் 60' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்," என்றார். கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் தாய்லாந்திற்குச் செல்லும் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 2025-ல் 2 மில்லியனைத் தாண்டியுள்ளது.

புதிய அறிவிப்பின் படி விசா இல்லாமல் இந்தியர்கள் 60 நாட்கள் வரை தங்கலாம், இது தவிர விசா பிரிவுகளை எளிதாக்கி, உலகளாவிய இ-விசா அணுகலை விரிவுபடுத்தி, டிஜிட்டல் வருகை படிவங்களையும் தாய்லாந்து அரசு மாற்றியுள்ளது. அதே வேளையில் விசா இல்லாமல் நீண்ட நாட்கள் தங்கலாம் என்ற சலுகையை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
திருத்தப்பட்ட விதிகளின்படி, இந்தியா உள்பட 93 நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சுற்றுலா, வேலை அல்லது குறுகிய கால வணிகத்திற்காக விசா இல்லாமல் தாய்லாந்துக்குள் நுழைந்து 60 நாட்கள் வரை தங்கலாம். முன்பு 30 நாட்கள் விசா-ஆன்-அரைவல் மட்டுமே இந்தியப் பயணிகளுக்கு இருந்தது.
தாய்லாந்து தூதரகம், "அடுத்த அறிவிப்பு வரும் வரை, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சுற்றுலா அல்லது ஓய்வுப் பயணங்களுக்காக 60 நாட்கள் வரை முன் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கலாம்," எனத் தெரிவித்துள்ளது.
பயணிகள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டியவை: தங்கும் காலத்திற்கான உண்மையான வாழ்விடச் சான்று, பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் பூர்த்தி செய்யப்பட்ட தாய்லாந்து டிஜிட்டல் வருகை அட்டை (TDAC) மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட திரும்பும் விமானச் சீட்டு.
கடந்த ஆண்டு தாய்லாந்து, டிஜிட்டல் நாடோடிகள் மற்றும் ரிமோட் நிபுணர்களுக்காக 'டெஸ்டினேஷன் தாய்லாந்து விசா (DTV)'வை அறிமுகப்படுத்தியது. கூடுதலாக, படிப்பு அல்லது படிப்புடன் கூடிய பணிக்காக புதிய 'நான்-இம்மிகிரண்ட் ED பிளஸ்' விசாவும் சிறப்பு விதிகளை வழங்குகிறது.
அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் கோடை விடுமுறை வர உள்ளது. இதனையொட்டி ஏராளமான இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வார்கள், இப்போது விசா இல்லாமலே செல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதால் இந்த ஆண்டு பலரும் தாய்லாந்துக்கு படையெடுக்க வாய்ப்புள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications