இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் பயணிகளுக்கான விசா கட்டாயமில்லை என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. இப்புதிய சலுகை அடுத்த மாதம் தொடங்கி மே 2024 வரையில் இது நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.

எந்த ஒரு நாட்டிற்கும் பிற நாட்டவர் வரும் போதும் விசா அவசியம், ஆனால் சில நாடுகள் மற்ற நாடுகள் உடன் இருக்கும் நட்புறவு காரணமாக ஆன் அரைவல் விசா சேவை வழங்கும், அதாவது விசா இல்லாமல் விமான டிக்கெட் எடுத்துவிட்டு அந்த நாட்டில் இறங்கிய பின்பு விசா எடுப்பது.
இதேபோல் சில நாடுகளுக்கு விசா இல்லாமலும் அனுமதி அளிக்கிறது ஆனால் இது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அளிக்கப்படும். இப்படி தாய்லாந்து தற்போது தன் நாட்டிற்கு அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தியர்களுக்கும், தைவான் நாட்டவர்களும் விசா இல்லாமல் பயணிக்க இந்த சுற்றுலா காலத்தை திட்டமிட்டு சலுகை அளித்துள்ளது.
இதுகுறித்து தைவான் அரசு செய்தித் தொடர்பாளர் சாய் வச்சரோன்கே கூறுகையில், இந்தியா மற்றும் தைவானில் இருந்து வருபவர்கள் தாய்லாந்தில் 30 நாட்களுக்கு தங்க அனுமதிக்கப்படுவார்கள். மலேசியா, சீனா மற்றும் தென் கொரியாவைத் தொடர்ந்து சுமார் 12 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் இந்த ஆண்டு தாய்லாந்தின் நான்காவது பெரிய சுற்றுலா பயணிகளை பெற்ற நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.
செப்டம்பர் மாதம், சீன சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை தாய்லாந்து அரசு நீக்கியுள்ளது. கொரோனா தொற்றுநோய் தாக்குவதற்கு முன்பு 2019 இல் சுமார் 1.1 கோடி சீன சுற்றுலா பயணிகளை தாய்லாந்து ஈர்த்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் 29 வரையிலான காலத்தில் மட்டும் தாய்லாந்து மொத்தம் 2.2 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 927.5 பில்லியன் பாட் பங்களிப்பை சுற்றுலா துறை கொடுத்துள்ளதாக தாய்லாந்து அரசு தரவுகள் கூறுகிறது.

இந்த வருடம் தாய்லாந்து அரசு சுமார் 2.8 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலக்கை கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications