தாய்லாந்து அரசாங்கம் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய குடிமக்கள் நீண்ட நாட்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கி வரலாம். 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 11-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த விசா தளர்வு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் படி இந்தியர்கள் தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தங்கி வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
உள்ளூரில் இருக்கும் இமிகிரேஷன் ஆபீஸில் விண்ணப்பித்து 30 நாட்களுக்கு உங்களுடைய வருகையை எக்ஸ்டென்ட் செய்து கொள்ளலாம். இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டித்திருக்கும் காரணத்தினால் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் இந்தியர்களுக்கு சுற்றுலா செல்வது மிகவும் எளிதாக மாறியுள்ளது. அழகான கடற்கரைகள் மற்றும் வளமான கலாச்சாரத்தைக் கொண்ட தாய்லாந்து இந்தியர்களின் பிரபலமான டூரிஸ்ட் ஸ்பாட்டாக இருக்கிறது.

முன்னதாக தாய்லாந்து செல்வதற்கான விசா பெறுவதற்கு கட்டணம் மற்றும் ஆவணங்கள் தேவைப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. ஆனால் ஆவணங்களே இல்லாத புதிய நடைமுறையின் காரணமாக 2024-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையில் இந்தியா சுற்றுலா பயணிகளின் வரத்து 16.17 மில்லியனாக அதிகரித்துள்ளது. விசா இல்லாத நுழைவு காரணமாக வார இறுதி விடுமுறையை பயன்படுத்தி தாய்லாந்துக்கு செல்லும் இந்தியர்களும் அதிகரித்துள்ளனர்.
முதன்முதலாக இந்தியர்களுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை தாய்லாந்து அரசு நவம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. அதிலிருந்து இந்த நடைமுறையை ஒரு வருடத்திற்கு நீட்டித்திருந்தது. அப்போது இந்தியப் பயணிகளால் தாய்லாந்து அரசுக்கு திடீர் வருவாய் அதிகரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியர்களுக்கு நிரந்தரமாக விசா இல்லாத நுழைவை வழங்க தாய்லாந்து அரசு முன்வந்தது.
தாய்லாந்து மட்டுமின்றி மலேசியாவிலும் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வெறும் 6 மாதங்களில் மலேசியா இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட நான்காவது விடுமுறை சுற்றுலா தலமாக மாறியது.
தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், மலேசியா, மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இந்த ஆண்டு சுற்றுலாத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளன. இதனால் மொத்தம் 70 மில்லியன் பார்வையாளர்கள் இந்த நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களின் பலர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது.
சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக, தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆறு நாடுகளுக்கும் ஷெங்கன் வகை விசாவை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவை அறிவித்துள்ளார் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications