தாய்லாந்து மன்னரான மகா வஜிரிலோங்கோர்ன் 10வது மன்னன் ராமர் என்றும் அழைக்கப்படுகிறார். உலகிலேயே அதிகளவு வைரங்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆடம்பரச் சொத்துகள் உள்ளன. இவரது சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்கள் என மதிப்படப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சம் கோடிகளாகும்.
மன்னர் வஜிரிலோங்கோர்னுக்கு சொந்தமான வீடு சுமார் 6,560 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இதில் பல அரசு கட்டடங்கள், மால்கள், ஹோட்டல்கள் உள்ளன. தாய்லாந்தின் மிகப்பெரிய சொத்து உடமையாளராக உள்ளார்.

தாய்லாந்தின் பல பெரிய நிதி நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் அதிக அளவு பங்குகளை மன்னர் வாங்கி குவித்துள்ளார். சியாம் கமர்ஷியல் வங்கியில் 23 சதவீதப் பங்கும், சியாம் சிமெண்ட் குரூப்பில் 33.3 சதவீதப் பங்கையும் வைத்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய பிரவுன் கோல்டன் ஜூபிளி வைரமான 545.67 கேரட் வைரத்தையும் வைத்துள்ளார். இதன் மதிப்பு 98 கோடி ரூபாயாகும். இவருக்கு வைரம் என்றால் மிகவும் விருப்பமாம். ஏராளமான வைர நகைகளை வாங்கிக் குவித்துள்ளார். இவற்றின் மதிப்பு பல மில்லியன் டாலர்கள் ஆகும்.
ஆடம்பர செலவுக்குப் பேர் போன மன்னர் மகா வஜிரிலோங்கோன் 38 விமானங்களுக்குச் சொந்தக்காரர். பல ஹெலிகாப்டர்கள், போயிங் விமானங்கள் சுகோய் சூப்பர் ஜெட்களையும் வைத்துள்ளார். இதை பராமரிக்கவே ஆண்டுக்கு ரூ.524 கோடி தேவை. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் மேலும் மேலும் விமானங்களை வாங்கிக் குவித்துள்ளார்.
300க்கும் மேற்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வைத்துள்ளார். இவரிடம் இல்லாத சொகுசு கார்களே இல்லை என்று சொல்லலாம். இது தவிர முழுவதும் தங்கத்தில் செய்யப்பட்ட 52 கப்பல்களை சொந்தமாக வைத்துள்ளார். அந்தக் கப்பல்களின் பக்கவாட்டு சுவர்களில் தங்கத்திலான பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மன்னரின் அரண்மனை 23 லட்சத்து 51 ஆயிரம் சதுர அடியில் விஸ்தாரமாக உள்ளது. ராசி காரணம் என்று சொல்கின்றனர். இதில் அவர் வசிக்க விரும்பவில்லை என்பதால் அரசு அலுவலகங்கள், அருங்காட்சியங்கள் வைக்க அனுமதி தந்துள்ளார். இது தவிர ஏராளமான நிலபுலன்களையும் மன்னர் வாங்கிக் குவித்துள்ளார்.
மன்னருக்கு ஏகப்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. தாய்லாந்தின் பிரபல வியாபாரம் மற்றும் தொழில்நிறுவனங்களிலும் அவர் நிறைய பங்குகளை வாங்கி குவித்துள்ளார். தொடர்ந்து வாங்கி வருகிறார்.
தாய்லாந்து நாட்டை அவர் இப்போதும் ஆண்டு வருகிறார். சரியான ஆடம்பரப் பிரியர். உலகளவில் அவர் மிகப்பெரும் செல்வந்தராக உள்ளார்.
அவரது ராணுவத்தில் பலம் வாய்ந்த கப்பல்களும் தரைப்படையும் உள்ளது. ராணுவத்துக்கான செலவு பற்றி மன்னர் மகா வாஜிரிங்கோலர்ன் கவலைப்படுவதே இல்லை. எப்போது நிதி தேவைப்பட்டாலும் உடனடியாகத் தந்துவிடுவார்.


Click it and Unblock the Notifications